Skip to main content

“இது நாடா அல்லது காடா?... தூத்துக்குடியில் போராடிய 13 பேரைக் கொன்றவர்கள்..!” - கனிமொழி 

Published on 23/03/2021 | Edited on 23/03/2021
The monsters is the reason for  13 people passes away who fought in Thoothukudi

 

திருவெறும்பூர் திமுக வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை ஆதரித்து எம்பி கனிமொழி பொன்மலைப்பட்டி மற்றும் குண்டூர் ஆகிய பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது கனிமொழி பேசியதாவது, “இந்த தேர்தல் மிக முக்கியமான தேர்தல். ஆட்சி பொறுப்பிற்கு வரவேண்டும் என்பதை காட்டிலும் தமிழகத்தில் சுயமரியாதையும் மீட்டெடுக்க வேண்டிய தேர்தல். தமிழ் மொழியையும் சமூகநீதியும் மீட்டெடுக்க வேண்டும், தமிழ்நாட்டை தமிழன் தான் ஆள வேண்டும். அதிமுக பிஜேபியின் பினாமி ஆட்சியாக செயல்படுகிறது அதனால் பிஜேபி என்ன சொல்கிறதோ அதை மட்டும் செய்கிறது. மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை சட்டத்திற்கு எதிராக ஸ்டாலின் குரல் கொடுத்ததோடு பாராளுமன்றத்தில் திமுக எம்பிகள் எதிர்ப்பு வாக்குகளை பதிவு செய்தோம். ஆனால் அதிமுக முதல்வர் அதனை ஆதரித்ததோடு, அதிமுக எம்பிக்கள் ஆதரவாக வாக்களித்தனர். தற்போது தேர்தல் வந்து விட்டதால் அதை ரத்து செய்வதாக தேர்தல் வாக்குறுதியில் அதிமுக அறிவித்துள்ளது. அதேபோல் விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டத்திற்கு எல்லோரும் எதிர்ப்பு தெரிவித்தோம், ஆனால் அவர்கள் ஆதரவு தெரிவித்தார்கள்.நம்மை கார்ப்பரேட்டிடம் அடமானம் வைத்து விடுவார்கள். ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்வதில்லை. அதனால் முத்திரை வைப்பதால், அதில் பாதி பொருட்கள் கிடைப்பதில்லை. அப்படியே கிடைக்கும் மண்ணெண்ய், சர்க்கரை பொருட்களின் அளவு குறைவாகவும், மிக மோசமாக உள்ளது. 

 


இந்த விவசாய சட்டம் வந்தால் நியாயவிலை கடைகளில் கிடைப்பது கிடைக்காது. மேலும் பாதுகாப்பான பொருள்களான எண்ணெய், இராகி, உருளைக்கிழங்கு உள்ளிட்ட  பொருள்கள் இந்த சட்டத்தின் மூலம் அவர்கள் பதுக்கி வைத்துக் கொள்வார்கள், அதனால் சாமானிய  மனிதரால் எப்படி பொருட்களை வாங்க முடியும். ஆனால் நான் தற்பொழுது இந்த சட்டத்திற்கு எதிராக அழுத்தம் கொடுப்பேன்.  அவர் நிறம் மாறும் முதல்வராக உள்ளார். அதற்கு உண்மையான பெயர் என்ன?  ஊர்ந்துபோய்  பதவி ஏற்றேனா என்கிறார். யாரால் பதவியேற்றதோ அவரை சேர்க்கக்கூடாது என்று கூறுவதை கூட அவரால் முடிவெடுக்க முடியாமல் டெல்லியில் போய் கேட்டு விட்டு வந்து முடிவு செய்கிறார். தன்னை முதல்வராக்கியவரையும் மதிக்கவில்லை தன்னை அமைச்சர் பதவி கொடுத்த ஜெயலலிதாவுக்கும் துரோகம் செய்துவிட்டார். ஜெயலலிதா இறப்பில் உள்ள மர்மம் குறித்து கேள்வி கேட்டதற்காக விசாரனை கமிசன் அமைத்தனர் ஆனால் அந்த கமிஷன் அப்படியே இருக்கிறது. இவர்கள் மட்டும் கமிசனை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஜெயலலிதா இறப்பின் உண்மை சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் திமுக ஆட்சிக்கு வந்ததும் தண்டிக்கப்படுவார்கள். அதிமுகவின் ஆட்சி காலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை மேலும் தமிழக முதல்வருக்கும் பாதுகாப்பு இல்லாமல் போனது. பொள்ளாச்சி குற்றவாளிகளை காப்பாற்றுவதற்கு அதிமுக அரசு முயற்சிக்கிறார்கள் இதில் 250 பெண்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளனர், அந்த குடும்பங்கள் மிரட்டபடுகின்றனர். மேலும் போலீஸ் அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லை, தனக்கு எதிராக நடந்த பாலியல் குற்றம் தொடர்பாக உயர் அதிகாரியை சந்தித்து புகார் கொடுக்கச் சென்ற அந்த போலீஸ் அதிகாரியை 50 போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். 

 

The monsters is the reason for  13 people passes away who fought in Thoothukudi

 

இது நாடா அல்லது காடா இவ்வளவு மோசமாக உள்ளது. தனது தொகுதியான தூத்துக்குடியில் போராடிய 13 பேரைக் கொன்றவர்கள். ஆனால் எனக்கு அதைப்பற்றி தெரியாது என முதல்வர் கூறினார். பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவு செய்து வெற்றி நடைபோடுகிறது தமிழகம் என பேப்பர் மற்றும் தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்கிறார். தமிழகம் ஊழலில்தான் முன்மாதிரியாக இருப்பதாகவும் சாலை, மாஸ்க், பல்பு உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வாங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாகவும் 1300 ரூபாய்க்கு வாங்க வேண்டிய எல்இடி பல்பு ரூ 6,000 கொடுத்து வாங்கியதாக கணக்கு எழுதி உள்ளனர். ஒடாத காற்றாலை மூலம் மின்சாரம் வாங்கியதாக கணக்கு உள்ளதாகவும், அதேபோல் ஆறு குளங்களை தூர் வாராமல் வெறுமென  கூறி கொண்டிருக்கிறார்கள். முதியோர் உதவித்தொகை மற்றும் விதவை பெண்கள் உதவித்தொகையை பாதியில் நிறுத்தி விட்டனர். திமுக ஆட்சிக்கு வந்ததும் அவர்களுக்கு ஆயிரத்து 500 ஆக உயர்த்தி வழங்கப்படும். மேலும் பெண்களின் உரிமை தொகை என மாதம் 1000 ரூபாய் ரேஷன் கார்டுகளில் உள்ள அனைவருக்கும் வழங்கப்படும். மேலும் கலைஞர் டிவி வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டதுபோல் வழங்கினார் என்றும் அவரது மகன் அதேபோல் சொன்னதை செய்வார் அதனால்  ஸ்டாலின் முதல்வராவதற்கு வாக்களிக்க வேண்டும். மேலும் வேலையில்லாத் திண்டாட்டம் தண்ணீர், ரேஷன் பொருட்கள் கிடைப்பதில்லை. இப்படி தான் தமிழகம் வெற்றி நடை போடுவதாகவும் கிண்டல் செய்தார்.

 

முதியோர் உதவித்தொகை மற்றும் விதவை உதவித்தொகை காசை எடுத்து தான் வெற்றி நடைபோடுகிறது தமிழகம் என்ற விளம்பரத்திற்கு பல ஆயிரக்கணக்கான கோடிசெலவு செய்திருக்கிறார்கள். நகர பேருந்துகள் பயணிப்பதற்கு கட்டணம் கிடையாது என்று திமுக தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளதாக தெரிவித்தார். மேலும் சிலிண்டர், பெட்ரோல், டீசல் விலை உயர்ந்ததாகவும் மோடி மானியம் போடுவதாக கூறினார். ஆனால் அந்த மானியம் வரவில்லை. திமுக தேர்தல் அறிக்கையில் ஒரு கேஸ் சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் வழங்கப்படும். பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறைக்கப்படும்.  சுய உதவி குழுக்கள் செயல்படவில்லை, திமுக ஆட்சிக்கு வந்ததும் அது செயல்பட தொடங்கும். அவர்களுக்கு மானியத்துடன் கூடிய சுழல் நிதி வழங்கப்படும்.  அதே போல் ஆண்களும் தொழில் தொடங்குவதற்கு மானியத்துடன் கூடிய வட்டியில்லா கடன் வழங்கப்படும். 5 சவரன் வரை அடகு வைத்து இருந்தால் அந்த கடன் தொகையை ரத்து செய்யப்படும். தலைவர் கலைஞர் 7000 கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்தது போல் தளபதியும் செய்வார், வேலையில்லா திண்டாட்டத்தை போக்குவதற்காக தமிழகத்தின் தொழில் முதலீடு செய்வதற்கு ஏற்பாடு செய்யப்படும். இதில் 75 சதவீதம் தமிழகத்தை சேர்ந்த ஆண் பெண்களுக்கு தான் வேலைகள் வழங்கப்படும்.  பொன்மலை பணிமனையில் 80 சதவீதம் மற்ற மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு எதிர் திருவெறும்பூர் எம்எல்ஏ அன்பில் மகேஷ் பொய்யாமொழி போராட்டம் நடத்தினார். மேலும் தமிழக அரசு வேலைவாய்ப்புகளில் எந்த மாநிலத்தில் வேண்டுமானாலும் தேர்வு எழுதலாம் என கூறியிருப்பது மத்திய அரசை திருப்திப்படுத்துவதற்காக அதிமுக அரசு கூறியுள்ளது. 

 

The monsters is the reason for  13 people passes away who fought in Thoothukudi

 

மேலும் மின்சாரத் துறையில் வெளிமாநிலத்தவர்கள் வேலை பார்த்து வருவதாகவும், இது நமது உரிமை பறிக்கப்பட்டு உள்ளது. பிஜேபி தனது வேட்பாளர் பட்டியலில் இந்தி மற்றும் இங்கிலீஷில் வெளியிட்டு உள்ளது, அவர்கள் இந்தியைத் தினிக்க பார்க்கிறார்கள் அதை எதிர்ப்பதற்கு அதிமுக அரசுக்கு முதுகெலும்பு இல்லை, தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததும் காலியாக உள்ள 3 லட்சத்து 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் தமிழர்களுக்கு வழங்கப்படும். அதேபோல் தொகுதியில் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை எதிர்த்து போட்டியிடும் அதிமுக கட்சியை சேர்ந்த முன்னாள் எம்பி குமார் இதுவரை எதுவுமே செய்ததில்லை. அப்போதைய முதல்வர் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் கொண்டுவரப்படும் என்று கூறினார், ஆனால் அது அமைக்கப்படவில்லை. திமுக ஆட்சி அமைந்ததும் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்படும். மேலும் திருவெறும்பூர் பகுதியில் திமுக ஆட்சிகாலத்தில் தான் சர்வதேச விமான நிலையம் விரிவாக்கம் தாலுகா அலுவலகம், டைடல் பார்க், மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம், அண்ணாமலை பல்கலைகழகம், ஐடிஐ, ஐஏஎம் ,நவல்பட்டில்  சமத்துவபுரம், எஸ்.சி மற்றும் பி.சி மாணவர்கள் தங்கும் விடுதி என அனைத்தும் செய்து கொடுக்கப்பட்டது. திமுக ஆட்சியில் இல்லாத காலத்தில்  எம்எல்ஏவாக உள்ள அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது தொகுதி வளர்ச்சி நிதியில் எதைச் செய்ய வேண்டுமானாலும் அதற்கு போராடித்தான் செய்ய வேண்டியுள்ளது என்றும் கூறினார். மேலும் இந்த பகுதியில் ஓர் போர்வெல்லுடன் கூடிய குடிநீர் தொட்டிகள், திருமண மண்டபம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை செய்து கொடுத்து உள்ளார்.

 

உங்கள் பிரச்சினைகளை தீர்க்க உதயசூரியனுக்கு வாக்களிக்க வேண்டும். மேலும் அரியமங்கலத்தில் உள்ள இந்த குப்பை கிடங்கு மாநகரத்திற்கு வெளியில் மாற்றப்படும். அதேபோல் ஆறு, ஏரி, குளங்கள் தூர்வாரப்படும், ஏரி, குளங்கள் தூர் வாரப்படாததால் வயல்களில் தண்ணீர் தேங்கியது. அப்படி தேங்கியதால் விவசாய பொருட்கள் சேதம் அடைந்தது. அதிமுக அரசு அதற்கு உரிய நிவாரணம் வழங்கவில்லை. பெண்களுக்கும், மக்களுக்கும் எதிரான இந்த ஆட்சி உள்ளது. டெல்லியில் நம்மை அடமானம் வைத்து இருப்பதாகவும் அதனால் தான் நீட் தேர்வு கொண்டுவருகிறார்கள். இதனால் பலர் படிக்க முடியாமல் போனதாகவும் தமிழ் நாட்டை மீட்டெடுக்க ஸ்டாலின் முதல்வர் ஆக வேண்டும் என்று கூறி” வாக்கு சேகரித்தார். அப்போது திமுக முன்னாள் எம்எல்ஏ சேகரன், பொன்மலை பகுதி செயலாளர் தர்மராஜ், தெற்கு ஒன்றிய செயலாளர் மாரியப்பன், நிர்வாகிகள் கயல்விழி சண்முகம் ஞானதீபம், மற்றும்  உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

 

 

 


 

சார்ந்த செய்திகள்