

Published on 29/08/2020 | Edited on 29/08/2020
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று (29.8.2020), காலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள அலுவலகத்தில், திருநெல்வேலி கிழக்கு மாவட்ட பா.ஜ.க.வைச் சேர்ந்த மாநில விவசாய அணி பொதுச் செயலாளர் கே.கணேஷ்குமார் தலைமையில், பா.ஜ.க.வின் பாளையங்கோட்டை ஒன்றியத் தலைவர் எஸ்.அண்ணாதுரை, மாநிலச் செயற்குழு உறுப்பினர் விவசாய அணி கேபிள் பனிநாதன் மற்றும் அ.ம.மு.க கட்சியின் மாவட்ட சிறுபான்மை அணி தலைவர் தாமஸ் அமிர்தராஜ், பாளையங்கோட்டை ஒன்றிய மாணவர் அணி செயலாளர் முருகன் ஆகியோர் தி.மு.க.வில் இணைந்தனர்.
அதுபோது திருநெல்வேலி கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் இரா.ஆவுடையப்பன், கீழப்பாவூர் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் சிவனுபாண்டியன், கழக வழக்கறிஞர்கள் ஏ.செல்வேந்திரன், செல்வ சூடாமணி ஆகியோர் உடனிருந்தனர்.