Published on 30/03/2018 | Edited on 30/03/2018
மேற்கு வங்கம் மாநில முதல்வர் மம்தா பானர்ஜி திமுக தலைவர் கலைஞரை சந்திக்கவுள்ளார்.

மேற்கு வங்கம் மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, பா.ஜ.க., காங்கிரஸ் அல்லாத மூன்றாம் அணி அமைக்கும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் முடிவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதற்கு ஆதரவளிக்குமாறு பல்வேறு அரசியல் தலைவர்களையும் அவர் சந்தித்து கோரிக்கை விடுத்து வருகிறார். சில தினங்களுக்கு முன்னர் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினிடமும் இதற்கான ஆதரவினை அவர் கோரியிருந்தார்.
இந்நிலையில், திமுக தலைவர் கலைஞர் மற்றும் செயல்தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திப்பதற்காக மம்தா பானர்ஜி சென்னை வரவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சந்திப்புக்காக ஏப்ரல் 10 மற்றும் 11 ஆகிய தேதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. திமுக தலைவருடனான மம்தா பானர்ஜியின் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.