Published on 19/03/2021 | Edited on 20/03/2021

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி, அனைத்து கட்சிகளின் சார்பிலும் மாநிலம் முழுவதும் தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைத்து கட்சிகளிலும் உள்ள நட்சத்திர பேச்சாளர்கள், முக்கிய தலைவர்கள் உள்ளிட்டோர் தங்களது கட்சியை ஆதரித்து வாக்கு சேகரித்து வருவதோடு, கட்சிகள் தங்களது தேர்தல் அறிக்கைகளையும் வெளியிட்டு மக்கள் மத்தியில் வாக்கு சேகரித்து வருகின்றன. அந்த வகையில் 'மக்கள் இயக்கங்கள்' சார்பாக 2021 சட்டசபைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன் சில முக்கிய அம்சங்கள்...


