Skip to main content

திமுக தோல்விக்கு இது தான் முக்கிய காரணமா?

Published on 25/10/2019 | Edited on 25/10/2019

தமிழகத்தில் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரியில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். இதில் விக்கிரவாண்டி தொகுதி அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வன் 1,13,428 வாக்குகளும், திமுக வேட்பாளர் புகழேந்தி 68,646 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 2,913 வாக்குகளும் பெற்றுள்ளனர். இந்நிலையில் சுமார் 44,782 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் புகழேந்தியை வீழ்த்தி அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் நாராயணன் 95377 வாக்குகளும், திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகர் 61932 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதில் அதிமுக வேட்பாளர் திமுக வேட்பாளரை விட 33,445 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இரண்டு இடைத்தேர்தல் தொகுதிகளிலும்  திமுகவை விட அதிமுக  30ஆயிரம் வாக்குகளுக்கு மேல் வித்தியாசத்தில் மேல் வெற்றி பெற்றது திமுக தரப்பிற்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
 

dmk



மேலும் விக்கிரவாண்டி, நாங்குநேரி இரண்டு தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெளியூர் வேட்பாளர்களை நிறுத்தியது அங்குள்ள மக்களிடையேயும், கட்சியினரிடையும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதனால் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர்கள் உற்சாகமாக வேலை பார்க்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது. அதே போல் வன்னிய சமுதாய மக்களுக்கு உள் இடஒதுக்கீடு கொடுக்கப்படும் என்று திமுக கூறியது மற்ற சமூக மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது என்றும் கூறுகின்றனர். அதேசமயம், திமுக தோல்வியை சந்தித்திருந்தாலும் 2016 சட்டமன்ற தேர்தலை காட்டிலும் 5 ஆயிரம் வாக்குகள் அதிகமாக பெற்றுள்ளனர். இதே போல் நாங்குநேரி தொகுதியில் தேவிந்திர குல வேளாளர் மக்கள் தேர்தலை புறக்கணித்தது அதிமுகவிற்கு சாதகமாக சென்றதாக சொல்லப்படுகிறது. இதனால் திமுகவிற்கு 15ஆயிரம் வாக்குகளுக்கு மேல் குறைந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. கடந்த சட்டமன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு 14ஆயிரம் வாக்குகள் பெற்ற சுரேஷ் என்பவரை இந்த இடைத்தேர்தலில் போட்டியிட விடாமல் அதிமுக தடுத்தது கூடுதல் பலமாக அதிமுகவிற்கு அமைந்தது என்றும்  கூறிவருகின்றனர்.   
 

 

சார்ந்த செய்திகள்