பெரம்பூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ராஜேஷ் மற்றும் வடசென்னை பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் மோகன்ராஜ் ஆகியோரை ஆதரித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர், காங்கிரஸ் - திமுக கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றிப்பெறக் கூடாது. இதற்கு நீங்கள் பொறுப்பேற்க வேண்டும். காங்கிரஸ் - திமுக கூட்டணி தமிழகத்தை வஞ்சித்த கூட்டணி. இந்த கூட்டணிதான் இலங்கையில் தமிழ் உறவுகள் படுகொலை ஆவதற்கு காரணம். ஆகவே தமிழக மக்கள் யாரும் காங்கிரஸ் - திமுக கூட்டணியை ஏற்றுக்கொள்ள முடியாது.
2ஜி ஊழல் உள்பட பல ஊழல்களை செய்த கூட்டணி காங்கிரஸ் - திமுக கூட்டணி. வடசென்னையிலும், பெரம்பூரிலும் திமுக வேட்பாளர்களை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும். பாஜக, அதிமுக, பாமக, தேமுதிக கூட்டணி ராசியான கூட்டணி. 2011ல் அமைந்தது போல ராசியான கூட்டணி. இந்த ராசியான 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். இது இயற்கையான கூட்டணி. எம்.ஜி.ஆரை ரோல் மாடலாக எடுத்துக்கொண்டு இன்றுவரை வாழ்ந்து கொண்டிருப்பவர் விஜயகாந்த்.
மத்தியிலும், மாநிலத்திலும் நடப்பது நம்முடைய ஆட்சி. ஆகையால் கொடுக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும். 18 சட்டமன்ற தொகுதியிலும் நடைபெறும் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற தேமுதிக துணை நிற்கும். அதிமுக ஆட்சி தொடர தேமுதிக கூட்டணி தர்மத்தோடு துணை நிற்கும். இவ்வாறு பேசினார்.