Skip to main content

தேர்தலில் போட்டியா?கி.வீரமணி பதில்

Published on 23/02/2019 | Edited on 23/02/2019


  தேர்தல் நெருங்கினால் சின்ன கட்சிகள் கூட மாநாடுகளை நடத்தி கூட்டத்தை கூட்டி கூட்டணி கட்சியில் கூடுதல் இடம் கேட்பது வழக்கம்.  அதே போல திராவிடர் கழகமும் மாநாடுகளை நடத்துகிறது. அந்த மாநாடு எந்த கூட்டணியை ஆதரிக்க கூடாது என்பதை சொலவதற்கான மாநாடாக அமைகிறது.
   

v

 

 இந்த நிலையில் தான் தஞ்சை திலகர் திடலில்  பிப்ரவரி 23 திராவிடர் கழக மாநாடும் 24 ந் தேதி அதிமுக, பாஜக ஜாதி மதவாத கூட்டணிக்கு எதிராக களமிறங்க உள்ள கட்சி தலைவர்களை அழைத்து சமூகநீதி மாநாட்டையும் நடத்துகிறார்கள்.

 

v


    இன்று பேணியுடன் தி.க. மாநாடு தொடங்கியுள்ள நிலையில் தி.க. தலைவர்  கி. வீரமணி செயதியளர்களிடம் பேசும் போது,    ஜாதி, மதவாதம் என்னும் பாம்பை வரவிடக்கூடாது.  மீறி வந்தால் பலமான தடி எடுத்து அடித்து விரட்ட வேண்டும். அந்த பலமான தடியாக திமுக தலைமையிலான கூட்டணி அமைந்துள்ளது. மதக் கூட்டணி வெற்றி பெறக்கூடாது என்பதற்காக மக்கள் தயாராகிவிட்டார்கள்.

 

v

 

கட்சிகள் தான் தயாராக வேண்டும்.  கஜா புயல் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அனுதாபம் கூட தெரிவிக்காத பிரதமர் நிவாரணம் சரியாக கொடுக்காத ஆட்சிகளை விரட்ட மக்கள் தயாராகிவிட்டார்கள். தற்போது ரூ 2 ஆயிரமும் ரூ 6 ஆயிரமும் கொடுப்பதாக சொல்கிறார்கள்.  2 ஆயிரத்தில் ரூ 1500 ஐ டாஸ்மாக் மூலம் வாங்கிவிடலாம் என்ற எண்ணமும் உண்டு.  இந்த தேர்தலில் திராவிடர் கழகம் போட்டியிடுமா? 

 

v


     எந்த காலத்திலும் போட்டியிடாது. ஆனால் விளக்கு எரியும் இடத்தில் மின்சாரமாகவும் கப்பலுக்கு கலங்கரை விளக்கமாகவும்  இருக்கும் வெளிச்சம் பார்த்து வராத கப்பல் மோதிக் கொள்வது போல கட்சிகள் போகும்.
    ராமதாஸ் ஊழலுக்கு எதிரான கூட்டணி என்று சொல்லி இருக்கிறார் அவருக்கே தெரியும் ஊழல்வாதிகள் யார் என்று’’என கூறினார்.


 

சார்ந்த செய்திகள்