Skip to main content

கேரள முதல்வர் பினராயி விஜயன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

Published on 28/04/2025 | Edited on 28/04/2025

 

threat to Kerala CM Pinarayi Vijayan house

கேரள முதல்வர் பினராயி விஜயன் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அவரது வீடு திருவனந்தபுரத்தில் அமைந்துள்ளது. இந்நிலையில் முதல்வர் பினராயி விஜயனின் வீடு மற்றும் அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

முதல்வர் பினராயி விஜயன் வீடு மற்றும் அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் வெடிகுண்டு நிபுணர்கள் அங்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டு வருகின்றனர் என முதல்வர் அலுவலகத்தின் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக திருவனந்தபுரத்தில் உள்ள விமான நிலையம் மற்றும் ரயில் நிலையங்களுக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்