Skip to main content

“தலைவருக்காக செய்கிறேன்..” - கீரமங்கலம் பேரூராட்சி துணைத்தலைவர் ராஜினாமா..! 

Published on 08/03/2022 | Edited on 08/03/2022

 

bv

 

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் பேரூராட்சி துணைத் தலைவர் பதவி திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், சிபிஐ வேட்பாளர் முத்தமிழ்செல்வி வேட்பு மனுத் தாக்கல் செய்திருந்தார். அதே நேரத்தில் திமுகவில் வெற்றி பெற்றிருந்த தமிழ்செல்வன் போட்டி வேட்பாளராக போட்டியிட்டு 11 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்தார். 

 

இதே போல, தமிழகம் முழுவதும் ஏராளமான பதவிகளை கூட்டணிக்கு ஒதுக்கியும் அவர்களிடம் தராமல் திமுகவினரே பறித்துக் கொண்டதாக கூட்டணித் தலைவர்கள் புகார் கூறிய நிலையில், கூட்டணி தர்மத்தை மதிக்க வேண்டும் கூட்டணிக்கு ஒதுக்கிய இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுகவினர் உடனே ராஜினாமா செய்துவிட்டு என்னை வந்து பாருங்கள் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை கொடுத்திருந்தார்.

 

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து தனக்கு வாக்களித்த 10 கவுன்சிலர்களுடன் வந்து கீரமங்கலம் பேரூராட்சி துணைத் தலைவர் பதவியை தமிழ்செல்வன் ராஜினாமா செய்தார். தொடர்ந்து பேசும் போது, “தலைவர் அறிவிப்பை மதித்து அமைச்சர்கள் மெய்யநாதன், ரகுபதி ஆகியோர் கருத்திற்கு மதிப்பளித்து எனது துணைத்தலைவர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறேன்” என்றார்.

 

அவருடன் வந்த மற்ற கவுன்சிலர்களில் சிலர் எப்போது தேர்தல் வந்தாலும் திமுக வேட்பாளரையே துணைத்தலைவர் ஆக்குவோம். இல்லை என்றால் 11 கவுன்சிலர்களும் தேர்தலை புறக்கணிப்போம் என்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்