Skip to main content

நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் 10 எம்பிகள் இடைநீக்கம்; ஜவாஹிருல்லா கடும் கண்டனம்

Published on 24/01/2025 | Edited on 24/01/2025
Jawahirullah strongly condemns the suspension of 10 MPs

நாடாளுமன்ற கூட்டுக்குழுவிலிருந்து 10 எம்.பி.க்கள் நீக்கப்பட்டிருக்கிறார்கள். இதற்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இதுகுறித்து மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்று நடைபெற்ற வக்பு மசோதா தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக்குழுக் கூட்டத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆ. ராசா, கல்யாண் பானர்ஜி, முகமது ஜாவேத், அசாதுதீன் ஓவைசி, நசீர் ஹுசைன், மொஹிபுல்லா, முகமது அப்துல்லா, அரவிந்த் சாவந்த், நதீம்-உல் ஹக், இம்ரான் மசூத் ஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பது ஒரு ஜனநாயக படுகொலை ஆகும்.  

வஃக்பு சட்டத்திருத்த மசோதாவின் கூட்டுக் குழு, இரண்டு அவைகளிலும் சேர்த்துமொத்தம் 31 உறுப்பினர்களுடன் அமைக்கப்பட்டது. மக்களவைக்கு 21 மற்றும் மாநிலங்களவைக்கு 10 உறுப்பினர்கள் இடம் இடம்பெற்றனர். கூட்டுக்குழுவின் 31 உறுப்பினர்களில் பாஜக 11, அதன் கூட்டணிகள் 5 என 16 எம்பிக்கள் உள்ளனர். நியமனஎம்பிக்கள் 2 என அரசுக்கு ஆதரவாக மொத்தம் 18 உறுப் பினர்கள் உள்ளனர்.  கூட்டுக்குழு நாடு முழுவதும் பயணம் செய்து பல தரப்பினருடமிருந்தும் ஆலோசனைகளை பெற்றது. இவற்றை ஆய்வு செய்ய தங்களுக்குபோதிய அவகாசம் வழங்கப்படவில்லை என்று  எதிர்க்கட்சி எம்.பிக்கள் குரல் எழுப்பிய நிலையில் அவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.   டில்லி சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு முன்பாக அரசியல் ஆதாயம் கருதி வக்பு திருத்தச் சட்டம் மசோதாவை உடனடியாக அமல்படுத்துவதற்கு ஒன்றிய அரசு முயன்று வருவது தெளிவாகிறது.   

சிறுபான்மையினர்கள் உரிமையைப் பறிப்பதிலும் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்டு செயலாற்றுபவர்களை ஒடுக்குவதிலும் ஒன்றிய அரசு முன்மையாகச் செயல்படுகிறது. நாடாளுமன்ற கூட்டுக் குழு உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன் " என்று தெரிவித்துள்ளார்

சார்ந்த செய்திகள்