Skip to main content

''ஏன் செங்கல்லை பிடிக்கப் போகிறாரா அண்ணாமலை? ''-அமைச்சர் பி.மூர்த்தி பேட்டி! 

Published on 08/05/2022 | Edited on 08/05/2022

 

Interview with Minister P. Murthy!

 

மத்திய அரசு 28 ஆயிரம் கோடி நிதியை தமிழக அரசுக்கு கொடுக்கவில்லை. அதை கொடுத்தாலே தமிழக மக்களுக்கு பல்வேறு  திட்டங்களை செயல்படுத்துவோம் என வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார்.

 

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள வருவாய் அலுவலர் சங்க அரங்கில் தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர்கள் சங்க விழா நடைபெற்றது. இதில் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டு பேசினார்.

 

பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மூர்த்தி, ''ஓராண்டு காலத்தில் அத்தனை துறையிலும் பல்வேறு வகையால் வேலைவாய்ப்பு, பொதுமக்களுக்கு அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றி தந்துள்ளோம். கோடிக்கணக்கானை நிதி மூலம் தொழிற்சாலைகளை உருவாக்கி தந்துள்ளோம். என்னென்ன செய்தோம் என்பதை ஆதாரப்பூர்வமாக முதல்வர் சட்டப்பேரவையில் விளக்கினார். 10 ஆண்டுகாலம் செய்ய முடியாததை ஓராண்டு காலத்தில் செய்துள்ளோம். மின்சாரம் கொடுக்க முடியவில்லை என்றால் ராஜினாமா செய்யுங்கள் என சி.டி ரவியின் கருத்துக்கு (பாஜக) எந்தந்த வகையில் இடையூறு செய்தாலும் அதையெல்லாம் முறியடித்துதான் ஓராண்டு காலத்தில் முதல்வர் பணி செய்துள்ளார். மத்திய அரசு கொடுக்க வேண்டிய மின் பகிர்வை கொடுக்கவில்லை. இத்தனை சிரமங்களுக்கு மத்தியில் விவசாயிகளுக்கு ஒரு லட்சம் மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

 

மத்திய தொகுப்பிலிருந்து வரவேண்டிய மின் பகிர்வு பற்றாக்குறை குறித்து  முதல்வர் தெளிவாக சட்டப்பேரவையில் விளக்கியுள்ளார். வாய்க்கு வந்தபடி எதை வேண்டுமானாலும் பேசுபவர்கள் தான் அவர்கள். நல்லது செய்ய வேண்டும் என்ற முதல்வரின் எண்ணத்தை மக்கள் தெளிவாக புரிந்து கொண்டுள்ளனர். எதிர்க்கட்சி தலைவர் துணைத்தலைவர் குற்றச்சாட்டுக்கு முதல்வர் பதில் அளித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் தெரிந்துகொண்டே தெரியாதது போல பேசுகிறார்'' என்றார். லூலூ மாலின் ஒரு செங்கல்லை கூட அனுமதிக்க மாட்டோம் என்ற அண்ணாமலையின் பேச்சு குறித்த கேள்விக்கு, ''ஏன் செங்கல்லை போய் பிடிக்க போறாரா? அண்ணாமலை'' என்றார்.

 

''இலங்கைக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிகளைச் செய்ய தீர்மானம் நிறைவேற்றி உதவிகளைச் செய்ய முன்வந்தவர் முதல்வர். வாயில் சொல்வது எளிது ஆனால் சொன்னதை செய்பவர் முதல்வர். தமிழக முதல்வர் தான் தமிழக மக்களுக்குச் செய்ய முடியும். தமிழ்நாடு பங்கீடு நிதிகளைப் பெற்றுக்கொண்டு, 1 ரூபாய் பெற்றுக்கொண்டு 35 பைசா கொடுக்கின்றனர். வணிகவரித்துறையில் முழுமையான வரி வருவாயை கொடுத்தாலே தமிழக அரசு இன்னும் சேவை செய்யும். தமிழக பணத்தைப் பெற்றுக்கொண்டு அதை திருப்பிக் கொடுக்காமல் இதைச் செய்வோம் அதைச் செய்வோம் என சொல்வது வெறும் பேச்சு மட்டுமே. இன்னும் மத்திய அரசு தர வேண்டிய 28 ஆயிரம் கோடியை இன்னும் தரவில்லை. என்னத்தயாவது பேசுகிறார்கள். பத்தாண்டுகளில் 6 லட்சம் கோடி கடன் வைத்துச் சென்றுவிட்டு, அதற்கு நாங்கள் வட்டியும், கடனும் கட்டிக் கொண்டுள்ளோம். முதலமைச்சர் செய்துள்ளார். அதற்கு இணையாக அவர்கள் என்ன செய்தார்கள் என சட்டமன்றத்தில் பேச சொல்லுங்கள்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தெருநாய்களுக்குக் கருத்தடை கோரி வழக்கு; நீதிமன்றம் சரமாரி கேள்வி!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
The court barrage of questions for Lawsuit for sterilization of stray dogs

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாலாஜி. வழக்கறிஞராக இருக்கும் பாலாஜி, மதுரை கிளை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். அவர் அளித்த அந்த மனுவில், ‘மதுரை மாநகராட்சி பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. இந்தத் தெருநாய்கள் சாலையோரத்திலும், பொது மக்கள் கூடும் இடத்திலும் சுற்றி வருகின்றன. சாலையில் செல்லும் போது தெருநாய்கள் குறுக்கே வருவதாலும், வாகனங்களில் குறுக்கே பாய்வதாலும் வாகன ஓட்டிகள் விபத்துக்களில் சிக்கும் அபாயம் உள்ளன. 

மேலும், தெருநாய்கள் கடித்து பலருக்கும் ரேபிஸ் நோய் பரவி வருகிறது. எனவே, நாய்களைக் கட்டுப்படுத்த வேண்டும். அவற்றின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை மதுரை கிளை உயர்நீதிமன்ற நீதிபதிகள் முன்பு வந்தது. 

அப்போது அரசு தரப்பில் கூறியதாவது, ‘மதுரை மாநகராட்சியில் தெருநாய்களைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை 39,000க்கும் மேற்பட்ட நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணிகளை மேற்கொள்ள மதுரை மாநகராட்சியில் 2 கால்நடை மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்’ எனத் தெரிவிக்கப்பட்டது. அதனைப் பதிவு செய்த நீதிபதிகள், ‘மதுரை மாநகராட்சியில் தெருநாய்கள் இவ்வளவு அதிகமாக இருக்கிறது. இந்தச் சூழலில், கருத்தடை பணிகளை மேற்கொள்ள இரண்டு கால்நடை மருத்துவ பணியிடம் எப்படி போதுமானதாக இருக்கும்?. எனவே, மதுரையில் கருத்தடை பணிகளுக்கு கூடுதலாக கால்நடை மருத்துவர்களை நியமிக்கலாம்’ எனக் கூறி இது தொடர்பான வழக்கை ஜூன் 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.