Skip to main content

ஈ.பி.எஸ். போட்ட உத்தரவு... குஷியான ஈரோடு அதிமுகவினர்

Published on 27/01/2023 | Edited on 27/01/2023

 

EPS held meeting with erode admk members

 

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களத்தில் ஆளுங்கட்சியான திமுக அதன் கூட்டணிக் கட்சி காங்கிரஸுக்கு தொகுதியை ஒதுக்கி, காங்கிரஸ் கட்சி ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை வேட்பாளராக அறிவித்து களப்பணியைத் தொடர்ந்து ஆற்றி வருகிறது.

 

எதிரணியான அதிமுகவில் எடப்பாடியும், ஓ. பன்னீர்செல்வம் முட்டி மோதி வருகிறார்கள். எடப்பாடி பழனிச்சாமி வேட்பாளரை அறிவிக்கத் தீவிரம் காட்டி வரும் நிலையில், ஆளை விடுங்க ஐயா.... என ஒவ்வொருவராகக் கும்பிடு போட்டு வருகிறார்கள் அதிமுகவினர். 

 

இந்த நிலையில் திமுக தேர்தல் பணிமனையைத் திறந்து, வேகமாக களப்பணி ஆற்றுவதில் அதிமுக நாங்களும் களத்தில் இறங்கி விட்டோம் என்பதை காட்ட எடப்பாடி பழனிச்சாமி 26 ஆம் தேதி காலை ஈரோட்டுக்கு நேரில் வந்துள்ளார். ஈரோடு வருவதற்கு முன்பு நசியனூர் என்ற பகுதியில் இருக்கும் அவரது குலதெய்வ கோயிலுக்கு எடப்பாடி பழனிச்சாமி சென்று தனது குல தெய்வத்தை மனம் உருக வேண்டி நல்ல வேட்பாளர் கிடைக்க வேண்டும்... இந்த தேர்தலில் தன் அணிக்கு அதிக வாக்குகள் பெற்று தனக்கு மரியாதையைக் கொடுக்க வேண்டும்... அதற்கு சாமியே நீதான் அருள் புரிய வேண்டும்.. என வேண்டிக் கொண்டார். அவரோடு முன்னாள் அமைச்சர்களான செங்கோட்டையன், கே.வி. ராமலிங்கம் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அதிமுகவினர் பலரும் கோயிலுக்கு வந்திருந்தனர். 

 

பிறகு ஈரோடு வில்லரசம் பட்டியில் உள்ள தனியார் கெஸ்ட் ஹவுஸில் உயர்மட்ட நிர்வாகிகளோடு ஈரோடு மாவட்ட அதிமுகவினரோடும் ஆலோசனை நடத்திய எடப்பாடி பழனிச்சாமி, மிக விரைவாக நாம் வேட்பாளரை அறிவிக்க வேண்டும். வேட்பாளருக்குத் தேவையான அனைத்து செலவுகளையும் தங்கமணி, வேலுமணி, கருப்பண்ணன் செய்வார்கள் என அங்கிருந்த அதிமுகவினரிடம் அறிவித்திருக்கிறார். இதன் பிறகே அதிமுக  குழுவில் கொஞ்சம் உற்சாகம் காணப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அடர்ந்த வனப் பகுதியில் 108 ஆம்புலன்ஸில் பிறந்த பெண் குழந்தை

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
girl child was born in the 108 ambulance near Anthiyur in a thick forest area at night

ஈரோடு மாவட்டம், அந்தியூர் தாலுக்கா, ஓசூர் அருகே சின்ன செங்குளம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் முனியப்பன். கூலி தொழிலாளி. இவரது மனைவி சரசு என்கிற சரசா (27). சரசு நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு 9:45 மணியளவில் சரசுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரது உறவினர்கள் தேவர்மலையில் உள்ள 108 ஆம்புலன்ஸ் குழுவினருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று சரசை ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டு இருந்தனர்.

அப்போது மணியாச்சி பள்ளம் என்ற அடர்ந்த வனப் பகுதியில் ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தபோது சரசுக்கு பிரசவ வலி அதிகரித்தது. நிலைமையைப் புரிந்து கொண்ட மருத்துவ குழுவினர் ஆம்புலன்ஸை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு சரசுக்கு பிரசவம் பார்க்க தொடங்கினர். இதில் சரசுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமாக உள்ளனர். இதனையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக பர்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.  108 மருத்துவ குழுவினருக்கு சரசு மற்றும் அவரது உறவினர்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.