




Published on 31/12/2020 | Edited on 31/12/2020
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் அதிமுக முதல்வர் வேட்பாளருமான எடப்பாடி பழனிசாமி நேற்று (31.12.2020) திருச்சி மாவட்டம் தொட்டியம், முசிறி, துறையூர், மனச்சநல்லூர், லால்குடி உள்ளிட்ட பகுதிகளில் பொது மக்களிடம் பரப்புரை மேற்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து இரண்டாவது நாளான இன்று காலை, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் தங்கமணி, விஜயபாஸ்கர், சேவூர் ராமச்சந்திரன், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோருடன் ஸ்ரீரங்கம் கோவிலுக்குச் சென்றார். கோவிலில் ரங்கநாதர் மற்றும் ரங்கநாயகியை தரிசித்துவிட்டு கோவில் யானையிடம் ஆசிபெற்றார்.
பின்னர், ராஜகோபுரம் எதிரே பொதுமக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்டு பேசியபோது, "ஜெயலலிதா ஸ்ரீரங்கம் தொகுதிக்குப் பல ஆயிரம் கோடி திட்டங்களை அறிவித்தார். அவற்றை அனைத்தும் செயல்படுத்தியுள்ளோம்" என்றார்.