







Published on 07/05/2021 | Edited on 07/05/2021
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியானது 66 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து அதிமுக எம்.எல்.ஏக்களின் கூட்டமானது இன்று அதிமுக அலுவலகத்தில் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் நடந்து முடிந்த தேர்தல் குறித்தும், எதிர்க்கட்சித் தலைவரை தேர்ந்தெடுப்பது குறித்தும் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.