Skip to main content

நாலு தொகுதி ஜெயிச்சா, ஒன்னு கன்பார்ம்... பாமகவுக்கு உறுதியளித்த பாஜக 

Published on 13/03/2019 | Edited on 13/03/2019

வரும் மக்களவை தேர்தலில் பாமகவுக்கு 7 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா உறுப்பினர் பதவி ஆகியவை ஒதுக்கப்பட்டுள்ளது.
 

modi ramadoss


முதல்கட்ட பேச்சுவார்த்தையில் பாமகவுக்கு தருமபுரி, கடலூர், விழுப்புரம், அரக்கோணம் ஆகிய 4 தொகுதிகளும் உறுதியாகியுள்ளன. தமாகாவை கூட்டணியில் சேர்த்துக்கொள்ள அதிமுக தலைமை முயற்சி எடுத்து வருவதால், 3 தொகுதிகள் குறித்து இன்னும் உறுதிசெய்யப்படவில்லை. 
 

பாமக தரப்பில் தேர்தல் பணிகள் குறித்த பேச்சுவார்த்தைகள் நடந்துவருகின்றன. இந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட பாமக மூத்த நிர்வாகிகள் இவ்வாறு கூறியுள்ளனர்,   “தேர்தலுக்கான பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது.  40 தொகுதிகளிலும் வெற்றி பெற முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். எங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளில், 4 தொகுதிகளில் வெற்றி பெற்றால் ஒரு மத்திய அமைச்சர் பதவி தருவதாக பாஜக உறுதி அளித்துள்ளது” 

 

 

 

சார்ந்த செய்திகள்