Skip to main content

அடுத்த நூறாண்டு காலத்திற்கு அதிமுகவை வெற்றி இயக்கமாக உருவாக்கிட உழைப்பேன்..! இ.பி.எஸ். ட்வீட்..!

Published on 07/10/2020 | Edited on 07/10/2020

 

edappadi palanisamy

 

2021 சட்டமன்றத் தேர்தலின் அ.தி.மு.க முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இன்று காலை சென்னை அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் அறிவித்தார். அவருக்கு கட்சியினரும், கூட்டணிக் கட்சியினரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

 

இந்தநிலையில் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், அடுத்த நூறாண்டு காலத்திற்கும் கழகத்தை வெற்றி இயக்கமாக உருவாக்கிட என்றும் அயராது உழைப்பேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

தனது டுவிட்டர் பக்கத்தில் அவர், ''புரட்சித்தலைவர் ஆரம்பித்த இயக்கத்தில் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் இருந்த இடத்தில் எனக்கு உறுதுணையாக இருந்து அடுத்த முறையும் வாய்ப்பு அளித்தமைக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.

 

தொண்டர்களின் எண்ணத்திற்கேற்ப கழகத்தைச் சீரும் சிறப்போடும் வளர்ச்சிப்பாதையில் அழைத்துச் செல்லவும், மாண்புமிகு அம்மா அவர்கள் கூறியதுபோல் அடுத்த நூறாண்டு காலத்திற்கும் கழகத்தை வெற்றி இயக்கமாக உருவாக்கிடவும் என்றும் அயராது உழைப்பேன் என உறுதி ஏற்கிறேன்''  இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்