தேர்தல் முடிவுகள் அதிமுகவில் பெரும் உட்கட்சி குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது.அதிமுகவில் எடப்பாடி அணி,ஓபிஎஸ் அணி என்ற நிலைமை தற்போது வரை கட்சிக்குள் நிலவுவதால், யாரிடம் கட்சி அதிகாரம் உள்ளது என்ற குழப்ப நிலையில் அதிமுக நிர்வாகிகளும்,தொண்டர்களும் உள்ளனர்.மேலும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வியை சந்தித்தது.இது அதிமுகவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் கட்சிக்கு தலைமை ஒருவர் இருக்க வேண்டும் என்று அதிமுக அமைச்சர்கள்,எம்.எல்.ஏ.க்கள்,நிர்வாகிகள்,தொண்டர்கள் விரும்புவதாக சொல்லப்படுகிறது.இதனால் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர்,இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பை நீக்கி விட்டு முன்பு இருந்த மாதிரி பொது செயலாளர் பதவி கொண்டு வரலாம் என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.இதில் எடப்பாடி பழனிச்சாமி,பன்னீர்செல்வம் ஆகிய இரண்டு பேரில் ஒருவருக்கு பொது செயலாளர் பதவி கொடுக்கப்படும் என்று அதிமுக வட்டாரங்கள் கூறிவருகின்றனர்.மேலும் தற்போது இடைத்தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை நீடிக்க காரணமாக இருப்பவர் எடப்பாடி பழனிச்சாமி,அதனால் அவர் தான் அடுத்த பொது செயலாளர் ஆக வேண்டும் என்று கட்சி நிர்வாகிகள் முடிவெடுத்ததாக சொல்லப்படுகிறது.
நடந்து முடிந்த தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் தனது மகன் வெற்றிக்காக மட்டுமே கவனம் செலுத்தியதாக குற்றச்சாட்டும் அதிமுக அதிமுக நிர்வாகிகள் முன்னிறுத்திக்கின்றனர்.மேலும் மகனுக்கு அமைச்சர் பதவி பெற வேண்டும் என்ற முனைப்பில் கட்சியில் இருக்கும் சீனியர்களுக்கு முக்கியத்துவம் தரவில்லை என்ற குற்றச்சாட்டும் ஓ.பன்னீர்செல்வம் மேல் இருப்பதால்,கட்சி நிர்வாகிகள்,அமைச்சர்கள்,எம்.ஏல்.ஏ.க்கள் எடப்பாடிக்கு ஆதரவாக இருப்பதாக சொல்லப்படுகிறது .இதனால் அதிமுகவில் அடுத்த பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிகம் இருப்பதாக சொல்லப்படுகிறது.இது சம்மந்தமான அறிவிப்பு விரைவில் அதிமுக தலைமையிடம் இருந்து வரும் என்று சொல்லப்படுகிறது.