Skip to main content

நான் சொல்றதைத்தான் கேட்கணும், இல்லன்னா பதவியை பறிச்சிடுவேன்... திமுக தலைவர் ஸ்டாலினுக்கு சென்ற தகவல்!

Published on 13/01/2020 | Edited on 13/01/2020

திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 16 கவுன்சிலர் வார்டுகள். இதில் 8 வார்டுகளில் தி.மு.க. தனித்து வெற்றி பெற்றுள்ளது. அ.தி.மு.க. 1, பா.ம.க. 4, சுயேட்சை, அ.ம.மு.க., தே.மு.தி.க. தலா 1 இடங்களில் வெற்றி பெற்றுள்ளார்கள். இந்நிலையில், தி.மு.க.வின் பெரணமல்லூர் கிழக்கு ஒ.செ. ராமசாமி, தான் பதவி வகிக்கும் கிழக்கு பகுதியில் வெற்றிபெற்ற மூன்று தி.மு.க. கவுன்சிலர்களை அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக அழைத்துச் சென்றார். இதற்காக அவருக்கு மட்டும் அமைச்சர் சேவூர்.ராமச்சந்திரன் தரப்பில் இருந்து 30 லட்ச ரூபாய் தரப்பட்டுள்ளது. இதனால் தி.மு.க.வின் பலம் 5 ஆக குறைந்தது.
 

dmk



ஜனவரி 6-ந் தேதி பதவியேற்புக்கு அ.தி.மு.க. ஒ.செ. செல்வராஜ், தே.மு.தி.க. மா.செ. தெள்ளார் கோபி, பா.ம.க. ஒ.செ.வுடன் தி.மு.க. ஒ.செ. ராமசாமி ஒரே காரில் வந்து இறங்கி, தன் பக்கம் நின்ற தி.மு.க. கவுன்சிலர்கள் மூன்றுபேரை பதவியேற்புக்கு அனுப்பிவைத்தார். பதவியேற்கும்போது அங்கிருந்த தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. பாண்டுரங்கன் தலைமையிலான தி.மு.க.வினர், அணி மாறிய தி.மு.க. கவுன்சிலர்களிடம் கேள்வி எழுப்பினர். நான்தானே சீட் வாங்கித் தந்தேன். "நான் சொல்றதைத்தான் கேட்கணும், இல்லன்னா பதவியை பறிச்சிடுவேன்னு ஒ.செ. சொன்னார்' என அப்பாவியாய் சொல்லினர். "அந்தாளால் ஒண்ணும் பண்ண முடியாது, கட்சித் தலைமை நினைத்தால்தான் எதுவும் செய்ய முடியும்' எனச்சொல்ல, பதவி ஏற்றுக்கொண்ட பின், பிரச்சினைக்குரிய 3 தி.மு.க. கவுன்சிலர்களில் இருவர் பாண்டுரங்க னுடன் சென்றனர். ஒரு தி.மு.க. பெண் கவுன்சிலர் மட்டும் அ.தி.மு.க. பக்கம் போன தி.மு.க. ஒ.செ. ராமசாமியுடன் சென்றார். போலீஸார் அவர்களை பத்திரமாக அனுப்பி வைத்தனர்.


இந்த தகவல் தி.மு.க. மா.செ. எ.வ.வேலுவுக்கு சொல்லப்பட்டது. அவர் அந்த பெண் கவுன்சிலரின் கணவருக்கு போன்செய்து பேசினார். அந்தப் பெண் கவுன்சிலரின் கணவர் தனது மனைவியை வரவைத்தார். 8 தி.மு.க. கவுன்சிலர்களுடன், சுயேட்சையாக போட்டியிட்டு கவுன்சிலராக வெற்றிபெற்ற தி.மு.க. காமாட்சி இணைந்தார். 9 கவுன்சிலர்களும் தி.மு.க. தரப்பில் சேர்மன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள இந்திராஇளங்கோவன் கட்டுப்பாட்டில் விடப்பட்டனர். 9 கவுன்சிலர்களுடன் தி.மு.க. தரப்பு பாண்டிச்சேரியில் சூட் ரூம் போட்டு பாதுகாப்பாக இருந்து வருகிறது. மீதியுள்ள 7 கவுன்சிலர்களுடன் திருநள்ளாறில் ரூம் போட்டு தங்கினார் அ.தி.மு.க. ஒ.செ. செல்வராஜ். அங்கிருந்து ஒரு கவுன்சிலர் எஸ்கேப்பாகி தி.மு.க.வின் எல்லைக்குள் வந்துவிட்டார். அ.தி.மு.க. பலம் தற்போது 6-ஆக குறைந்துள்ளது. "சேர்மன் தேர்தலின்போது பாருங்க, அதிசயம் நடக்கும்' என அ.தி.மு.க. இப்போதும் சவால் விட்டுக்கொண்டுள்ளது.


இதே மாவட்டம், ஜம்னாமத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 7 கவுன்சிலர் வார்டுகள். இதில் 3 வார்டுகளில் அ.தி.மு.க.வும், 2 வார்டுகளில் தி.மு.க.வும், 1 வார்டில் தே.மு.தி.க.வும், 1-ஆவது வார்டில் சுயேட்சையும் வெற்றிபெற்றனர். சுயேட்சையாக வெற்றி பெற்றவர் தி.மு.க.வுக்கு சாதகமாக திரும்பிவிட்டார். அப்படியிருந்தும் அ.தி.மு.க., தே.மு.தி.க. ஆதரவுடன் 4 கவுன்சிலர்கள் என முன்னிலையில் இருந்தது. அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காளி என்கிற கவுன்சிலர், தனக்கு துணைசேர்மன் பதவி வேண்டும் என கேட்டுள்ளார். இதனை ஜம்னாமத்தூர் அ.தி.மு.க. ஒ.செ. வெள்ளையன் மறுத்ததோடு, காளியை மோசமாக பேச காளி கோபமாகிவிட்டார். இதனை அறிந்த தி.மு.க. நிர்வாகிகள் காளியிடம் பேசியதும் காளி தலைமறைவாகிவிட்டார். "தி.மு.க.வினர்தான் கடத்திவிட்டார்கள்' என ஒ.செ. வெள்ளையன் குற்றம்சாட்டினார்.

கடந்த ஜனவரி 6-ந் தேதி ஜம்னாமத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வெற்றி பெற்றவர்கள் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர். பதவி யேற்புக்கு வந்த கவுன்சிலர் காளியை, வெள்ளையன் ஆட்கள் தாக்க முயன்றனர். அவரை போலீஸார் பாதுகாப்பாக பதவியேற்க வைத்து அவரது வீட்டுக்கு அனுப்பிவைத்தனர்.
 

 

dmk



இந்நிலையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள கவுன்சிலர் காளி, "என்னை ஒருபக்கம் அ.தி.மு.க.வும் இழுக்குது. மற்றொரு பக்கம் தி.மு.க.வும் இழுக்குது. நான் இரண்டு பக்கத்தில் யார் பக்கம் போகணும்கிறதை அமைச்சர், எம்.எல்.ஏ., கலெக்டரை சொல்லச் சொல்லுங்க. அவுங்க சொல்றதை கேட்டுக்கறேன். இரண்டு பக்கமும் என்னை கொலை செய்யப் பார்க்கறாங்க. என் உயிருக்குப் பாதுகாப்பில்லை; அதனால் எனக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டும்' எனப் பேசி வீடியோ வெளியிட்டுள்ளார். இதனை காவல்துறையினருக்கும் கோரிக்கையாக எழுதித் தந்தார். அதனால் கவுன்சிலர் காளி வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டுள்ளது. தி.மு.க., அ.தி.மு.க. இரண்டு தரப்பும் விடாமல் காளியிடம் மறைமுகமாக பேச்சுவார்த்தை நடத்தின.

"என் மகள் ஜீவா சேர்மனாவதற்கு ஓட்டுப் போட்டு ஜெயிக்க வைக்க லன்னா நீங்க யாரும் மலையிலயே இருக்க முடியாது'' என ஒ.செ. வெள் ளையன், கவுன்சிலர்களை மிரட்ட மிரண்டுபோயுள்ளனர் அ.தி.மு.க., தே.மு.தி.க. கவுன்சிலர்கள்.


 

சார்ந்த செய்திகள்