Skip to main content

"வழக்கைப் பற்றி பயமில்லை!" -திமுக முன்னாள் மேயர் பதிலடி

Published on 20/04/2020 | Edited on 20/04/2020


திமுக முன்னாள் மேயர் உட்பட 40 நிர்வாகிகள் மீது சேலம் மாவட்ட காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்திருப்பது திமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரோனா பாதிப்பால் வாழ்வாதாரம் இழந்துள்ள சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் உள்ள தூய்மைப் பணியாளர்கள், வீடரற்ற ஏழைகள், அமைப்பு சாரா தொழிலாளர்கள், திருநங்கைகள் என பல்வேறு தரப்பினருக்கும் நிவாரண உதவிகளை வாங்கினார் சேலம் மாவட்டத்தின் முன்னாள் மேயர் ரேகா பிரியதர்ஷினி. கெங்கவல்லி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கெங்கவல்லி, தம்மம்பட்டி, தலைவாசல் ஆகிய பகுதிகளில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன. 

 

tt

                    

இந்த நிலையில், திடீரென ரேகாபிரியதர்ஷினி,  சேலம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் சிவலிங்கம், ஒன்றிய செயலாளர்கள் அகிலன், பாரப்பட்டி சுரேஷ்குமார், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் சின்னதுரை உள்ளிட்ட  திமுகவினர் 40 பேர் மீது கெங்கவல்லி, தம்மம்பட்டி, ஆத்தூர் புறநகர் காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்திருக்கிறது காவல்துறை. இவர்கள் மீது 188, 143, 269 ஆகிய 3 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள். 
               

இந்தச் சம்பவம், சேலம் திமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ரேகா பிரியதர்ஷிணியிடம் இது குறித்து கேட்டபோது, ‘’பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு நிவாரண உதவிகளைச் செய்ய தடையில்லை எனச் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. மேலும், முன் அனுமதி பெற்று உதவிகள் வழங்கலாம் எனவும் தீர்ப்பில் சொல்லப்பட்டிருக்கிறது.            
                  

http://onelink.to/nknapp


இதனையடுத்து தம்மம்பட்டி, கெங்கவல்லி, ஆத்தூர் புறநகர் காவல் நிலையங்களில் முன் அனுமதி பெற்று நிவாரண உதவிகளை வழங்கினோம். நீதிமன்ற உத்தரவின் படி, நிவாரண உதவிகள்  வழங்கு போது கட்சிக்காரர்கள் யாரும் கூட்டாமாக இல்லை. அதேபோல, பயனாளிகளுக்கு நிவாரண உதவி வழங்கு போது, சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தும் , மாஸ்க் அனிந்தபடியும் தான்  வழங்கப்பட்டது. 
 

மேலும், இந்த உதவியை வழங்கிய போது காவல்துறையினர் எங்களுக்குப் பாதுகாப்பு கொடுத்தனர். நீதிமன்ற உத்தரவுகளுக்குப் புறம்பாகவோ, 144 தடை உத்தரவுகளுக்கு எதிராகவோ நாங்கள் நடந்து கொள்ளவில்லை. அப்படி நடந்திருந்தால் பாதுகாப்பிற்காக வந்த போலீசார், அப்போதே எங்களை எச்சரிக்கை செய்திருக்கலாம். ஆனால், செய்யவில்லை. காரணம், நாங்கள் எந்த விதிகளையும் மீறவில்லை என்பதுதான். 
 

நிவாரண உதவி வழங்கிவிட்டு வந்த பிறகு, அதிமுக தரப்பிலிருந்து அரசுக்கு என்ன தகவல் போனது என எங்களுக்குத் தெரியவில்லை. ஆனால், எங்களுக்கு எதிராகச் சொல்லப்பட்டிருக்கிறது. அதன்படி, அவசரம் அவசரமாக என் மீதும் கட்சிக்காரர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள். இது  பொய் வழக்கு இது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே வழக்கைப் பதிவு செய்திருப்பதாக நினைக்கிறோம். வழக்கைக் கண்டு எங்களுக்குப்  பயமில்லை. நிவாரண உதவிகளில்  கூட தொடர்ச்சியாக அரசியல் செய்து வருகிறது அதிமுக அரசு. வழக்கை சட்டரீதியாகச் சந்திப்பேன்‘’ என்கிறார் அழுத்தமாக.


 

சார்ந்த செய்திகள்