Skip to main content

சார், அந்தத் தெலுங்கானா... அதுவும் நாம சொல்லி தானா... அன்புமணி ராமதாஸிற்கு தி.மு.க. எம்.பி பதிலடி!

Published on 10/06/2020 | Edited on 10/06/2020

 

pmk

 


10- ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு தொடர்பாக உரையாற்றிய முதல்வர் பழனிசாமி, "கரோனா குறுகிய காலத்தில் குறைய வாய்ப்பில்லை என நோய்த் தொற்று வல்லுநர்கள் கூறியுள்ளனர். தற்போது உள்ள நிலையில் சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மாணவர் நலன் கருதி, தமிழகத்தில் ஜூன் 15- ஆம் தேதி தொடங்கவிருந்த 10- ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுகிறது. மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி 'ஆல் பாஸ்' செய்யப்படுவர். 10- ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் 80% மதிப்பெண் அளிக்கப்படும். எஞ்சிய 20% மதிப்பெண்கள் வருகை அடிப்படையில் நிர்ணயிக்கப்படும். நிலுவையில் உள்ள 11- ஆம் வகுப்புத் தேர்வும் ரத்து செய்யப்படுகிறது. சூழலைப் பொறுத்து நிலுவையில் உள்ள 12- ஆம் வகுப்புத் தேர்வு குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும்." என்று முதல்வர் பேசினார். 
 


இந்த நிலையில் பா.ம.க.வின் ராஜ்யசபா எம்.பி. அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து கருத்து தெரிவித்தார். அதில், பா.ம.க. கோரிக்கையை ஏற்று 10 மற்றும் 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. இதன் மூலம் அனைத்து மக்களின் அச்சத்தை அரசு போக்கியிருக்கிறது; நிம்மதியை ஏற்படுத்தியிருக்கிறது என்று கூறினார். பா.ம.க. அன்புமணியின் இந்தக் கருத்துக்கு தருமபுரி தி.மு.க. எம்.பி. டாக்டர். செந்தில்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார். அதில், சார்... அந்த தெலுங்கானா..... அதுவும் நாம சொல்லி தானா.... என்று கூறியுள்ளதோடு பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு ரத்துக்கு வரவேற்பும் எனக் குறிப்பிட்டுள்ளார். 
 

 

சார்ந்த செய்திகள்