அ.தி.மு.க. புதிய மாவட்டச் செயலாளர்கள் நியமனங்களில் அதிருப்தி இருப்பதுபோல் தி.மு.க.விலும் மா.செ. நியமன விவகாரம் புயலைக் கிளப்பியிருக்கிறது.
தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் வகித்து வந்த, சென்னை மேற்கு மா.செ. பதவி காலியானதால், அங்கே பொறுப்பாளராக கட்சியின் சீனியர் ஒருவரை நியமிக்க வேண்டுமென துரைமுருகனும் தயாநிதி மாறனும் வலியுறுத்தி வந்தார்கள்.
இந்த நிலையில், அவர்களின் கோரிக்கையைப் புறக்கணித்துவிட்டு மேற்கு மாவட்டப் பொறுப்பாளராக, உதயநிதிக்கு நெருக்கமான இளைஞரணி சிற்றரசுவை நியமித்திருக்கிறது அறிவாலயம்.
சீனியர்களான பகுதிச் செயலாளர்கள் பலர் இருக்கும் நிலையில், சிற்றரசுவை நியமிக்க உதயநிதி காட்டிய அக்கறையை மு.க.ஸ்டாலினால் மீற முடியவில்லை எனச் சொல்கிறார்கள். சீனியர்களின் ஒத்துழைப்பு இல்லாமல், தேர்தல் நெருங்கும் நேரத்தில் மா.செ.வால் செயல்பட முடியுமா என்கிற கேள்வியும் இருக்கிறது. அதனால், ஸ்டாலின்-உதயநிதி அட்வைஸ்படி சீனியர்களைச் சந்திக்க இருக்கிறார் புது மா.செ. சிற்றரசு. பகுதிச் செயலாளர் பதவிகளிலும் இளையவர்கள் நியமிக்கப்படலாம் என பேச்சு அடிபடுகிறது. மா.செ. நியமனங்கள் கழகங்களில் கலகத்தை உண்டாக்கியிருக்குது.''