Published on 31/07/2020 | Edited on 31/07/2020

நத்தத்தில் தி.மு.க.வில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள பாலப்பநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஊர் நாட்டாண்மை குப்பான் தலைமையில் 50-க்கும் மேற்பட்டவர்கள் தி.மு.க.வில் இருந்து விலகினர். அவர்கள் நத்தத்தில் முன்னாள் அமைச்சரும், திண்டுக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளருமான ஆர்.விசுவநாதன் முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர். அப்போது அ.தி.மு.க. மாநில ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளரும், நத்தம் ஒன்றியக்குழு தலைவருமான ஆர்.வி.என்.கண்ணன், நத்தம் ஒன்றியச் செயலாளர் ஷாஜகான், நத்தம் பேரூர் கழகச் செயலாளர் சிவலிங்கம் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.