Skip to main content

கமல் கட்சிக்கு டெபாசிட் கூட கிடைக்காது: நீக்கப்பட்ட நிர்வாகி அதிரடி

Published on 04/04/2019 | Edited on 04/04/2019

 

கமல் கட்சிக்கு டெபாசிட் கூட கிடைக்காது என மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட விருதுநகர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
 

திருவில்லிபுத்தூரில் புதன்கிழமை செய்தியாளர்களை சந்தித்த அவர், கமல்ஹாசன் மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகளை மதிப்பதில்லை. கட்சியின் மாநில துணைத்தலைவர் மகேந்திரன், மாநில பொதுச்செயலாளர் அருணாச்சலம் ஆகியோரின் பிடியில் கமல்ஹாசன் உள்ளார். 


 

Kamal Haasan



தேர்தல் முடிவதற்குள் ஏராளமான நிர்வாகிகள் அவரது கட்சியிலிருந்து விலகுவார்கள். அவருக்காக லட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்தேன். தென்மாவட்ட பொறுப்பாளர்கள் அனைவரும் சேர்ந்து ரூ. 65 லட்சம் செலவு செய்து, நெல்லையில் பொதுக்கூட்டம் நடத்தினோம். இதற்காக எங்களுக்கு நன்றி, வாழ்த்து என ஒரு வார்த்தை சொல்லவில்லை. தேர்தலில் மநீம டெபாசிட் வாங்காது. கட்சி கமல்ஹாசன் கையில் இல்லை. மாவட்ட பொறுப்பாளர்களிடம் கடந்த 4 மாதமாக அவர் தொடர்பு கொள்ளவில்லை. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 10 மாவட்ட பொறுப்பாளர்கள் வெளியேறி உள்ளனர். இவ்வாறு கூறினார். 
 

கடந்த மாதம் மக்கள் நீதி மய்யம் கட்சியின் திருப்பூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வெங்கடேசன் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அவரும் இதேபோல் குற்றச்சாட்டுக்களை கூறியது குறிப்பிடத்தக்கது. 
 

சார்ந்த செய்திகள்