ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா மறைவைத் தொடர்ந்து அறிவிக்கப்பட்ட ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை பல்வேறு பரபரப்புகளைக் கடந்து இன்று நடைபெறுகிறது. அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என 77 பேர் போட்டியிட, இடைத்தேர்தல் களம் பிரச்சாரத்துடன் சூடுபிடித்த நிலையில், கடந்த 27 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.
தொடர்ந்து காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் முன்னணியில் உள்ள நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்பொழுது பேசிய அவர், ''ஈரோடு கிழக்கு தொகுதி மக்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்து நிறைவேற்றுவேன். முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் நானும் எம்எல்ஏவாக பங்கு பெறுவது பெருமையாக உள்ளது. ராகுல் காந்தி மீது தமிழக மக்களுக்கு ஈர்ப்பு என்பதையே இந்த வெற்றி காட்டுகிறது. மதச்சார்பற்ற கூட்டணி மீது தமிழக மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை தேர்தல் முடிவு காட்டுகிறது. கடும் வெயிலை பொருட்படுத்தாமல் முதல்வர் ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டதற்கு நன்றி'' என்றார்.