Skip to main content

சல்லி சல்லியான அதிமுக அலுவலகம்! கவலையுடன் கண்ட சி.வி.சண்முகம்! 

Published on 21/07/2022 | Edited on 21/07/2022

 

கடந்த 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு பின் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஏற்பட்ட மோதல் காரணமாக அ.தி.மு.க. அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சீலை அகற்றக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனியே வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கில் இருதரப்பு வாதங்களுக்குப் பின் நேற்று சென்னை உயர்நீதிமன்றம் தலைமை அலுவலகத்தின் சாவியை இபிஎஸ் வசம் ஒப்படைக்க உத்தரவிட்டது.

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி இன்று அதிமுக தலைமை அலுவலகம் திறக்கப்பட்டது. அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி அணியின் சார்பில், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையிலான அதிமுகவினர் அலுவலகத்தை திறந்து உள்ளே சென்றனர். அப்போது, அலுவலகத்தினுள் ஆவணங்களும், பொருட்களும் கீழே சிதறியிருந்துள்ளது. இந்நிலையில், இன்று இ.பி.எஸ். அதிமுக ஆதரவாளர்களுடன் கட்சி அலுவலகத்திற்குள்ளே சென்ற சி.வி.சண்முகம் இதனைக் கண்டு கவலையுற்றதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்