Published on 19/03/2020 | Edited on 19/03/2020
நிதித்துறை நெருக்கடி, பொருளாதார சரிவு என்று நாடு தடுமாறும் நிலையில், சமீபத்தில் பிரச்சனையை சந்தித்த எஸ் பேங்கை, ரிசர்வ் பேங்க் மீட்டெடுக்க முனைந்த நிலையில், மத்திய பா.ஜ.க. அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு, எஸ் வங்கியின் 49% பங்குகளை வாங்கும்படி ஸ்டேட் பேங்க் ஆஃப் இண்டியாவை களமிறக்கி உள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை வினோதமானது என்று காங்கிரஸ் சீனியரான ப.சி. கடுமையாக விமர்சித்துள்ளார்.
அதேபோல், தமிழகத்தைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் வங்கிகளில், கரூர் வைஸ்யா வங்கி, தனலட்சுமி வங்கி, சௌத் இண்டியா வங்கி உள்ளிட்டவைகளின் நிலமையும் மோசமாகிவிட்டன. எல்லாத்தையும் சரிசெய்ய வேண்டிய ரிசர்வ் வங்கியையும் சுதந்திரமாகச் செயல்பட விடாமல் மோடி அரசு பலவீனமாக்குகிறது என்கிறார்கள் நிதித்துறை நிபுணர்கள்.