2020- 2021 ஆம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டை தமிழக துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் கடந்த பிப்ரவரி 14- ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து பட்ஜெட் உரை மீதான காரசார விவாதம் நடைபெற்று வருகிறது. அதில் முக்கியமாக டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு பற்றியும், குடியுரிமை திருத்தச் சட்டம் பற்றியும், வண்ணாரப்பேட்டை போராட்டம் குறித்தும் விவாதிக்கப்பட்டன.
இந்த நிலையில் சென்னையில் நெருக்கடி அதிகரிப்பதால், சென்னையில் சட்டமன்றம் மட்டும் இருக்கட்டும், தலைமைச் செயலகம் திருச்சியில் வைக்கலாம் என்று எடப்பாடி ஆலோசனையில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அண்மையில் ஆந்திராவுக்கு 3 தலைநகர் அறிவிக்கப்பட்டிருப்பதை கருத்தில் கொண்டு அவருக்கு இப்படி ஒரு ஆலோசனை ஏற்பட்டுள்ளதாக சொல்கின்றனர். இதற்கு சீனியர் அமைச்சர்களோ, எம்.ஜி.ஆர்.காலத்திலேயே இப்படி ஒரு ஆலோசனை வந்தது, பிறகு சரி வராது என்று அந்த திட்டத்தை கைவிட்டதாக எடப்பாடியிடம் எடுத்து கூறியுள்ளனர்.