







Published on 07/08/2021 | Edited on 07/08/2021
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் மூன்றாம் ஆண்டு நினைவுதினத்தையொட்டி, சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (07/08/2021) காலை 08.00 மணியளவில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து அண்ணா அறிவாலயம் சென்ற முதல்வர், அங்குள்ள கலைஞரின் உருவச்சிலை மற்றும் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார். பின்னர் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள் உள்ளிட்டோரும் கலைஞர் உருவச்சிலை மற்றும் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.