
மஜகவின் 75 நாட்கள் உறுப்பினர் சேர்ப்பு முகாமை மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடக்கி வைக்க பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. குத்தாலம் வருகை தந்தார்.
அங்கு செய்தியாளர்களை சந்தித்த அவர், கரோனா நெருக்கடி காலத்தில் மக்கள் வருவாய் இழந்துள்ளனர். இந்த 7 மாதங்களில் ரம்ஜான், பக்ரீத் போன்ற பண்டிகைகளுக்கு கூட மத்திய அரசு நேரடி உதவிகளையோ, பண்டிகை உதவிகளையோ வழங்கவில்லை. தீபாவளியை முன்னிட்டாவது மத்திய அரசு நாடெங்கிலும் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாயை வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
ரஜினியின் அரசியல் குறித்த கேள்விக்கு, அவர் ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துவதாக கூறியவர், ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஆனால் ரஜினி ஆன்மீகம், அமைதி, தனிமை என விரும்புபவர். அரசியல் என்பது நெருக்கடி, மன அழுத்தம், பரபரப்பு ஆகியவற்றை கொண்டது. இது ரஜினியின் இயல்புக்கு ஒத்து வருமா? என தெரியவில்லை. மூப்பனார் காலத்தில் அவர் அழைத்தப் போதே வந்திருந்தால் அவர் இந்நேரம் ஒரு இலக்கை எட்டியிருந்திருப்பார் என்றும் கூறினார்.