வரும் 21-10-2019 அன்று நடைபெறவிருக்கும் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக கு.கந்தசாமி போட்டியிடுகிறார். இதற்காக அவர் இன்று பிற்பகல் 2 மணியளவில் வேட்புமனு தாக்கல் செய்தார்.
முன்னதாக அவர் நாம் தமிழர் கட்சியின் உறுதிமொழியேற்றார். பின்னர் மாட்டுவண்டியில் ஊர்வலமாகச் சென்று விக்கிரவாண்டி தொகுதி தேர்தல் அதிகாரி அவர்களிடம் வேட்புமனு வழங்கினார்.
விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்ரத கந்தசாமிக்கு வயது 36. பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு தனியார் நிறுவன ஒப்பந்த ஊழியராகப் பணிபுரிகிறார், சமூகச் செயற்பாட்டாளர், 2009ஆம் ஆண்டு முதல் சிகரம் நற்பணி மன்றம் தொடங்கி கிராமப்புற ஏழை எளிய முதியோர்களுக்கு மனமகிழ் சுற்றுலா, ஆன்மீகச் சுற்றுலா, மருத்துவ உதவிகள், ஏழை மாணவர்களுக்கு தேர்வில் வெற்றிபெற பயிற்சி மற்றும் பரிசுகள் வழங்கி ஊக்கப்படுத்தி வருகிறார்.