1 -15
Thiruma as sitting MP couldn’t do anything? This shows he has not done anything for his cadres. He has not raised single question to DMK about Panchami land or anything.. basically “vai le vada suduraru” he is clearly exposing his failures.
— Gayathri Raguramm (@gayathriraguram) May 25, 2020
கடந்த பிப்ரவரி மாதம் தி.மு.க. அமைப்புச் செயலாளரான ஆர்.எஸ்.பாரதி, கலைஞர் வாசகர் வட்ட விழாவில் கலந்து கொண்டு பேசி இருந்தார். அப்போது அவர் நீதிபதிகள் நியமனம் தொடர்பாகத் தெரிவித்த கருத்துகள், தாழ்த்தப்பட்ட மக்களை அவமதிக்கும் வகையில் இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இதனையடுத்து சென்னை ஆலந்தூரில் உள்ள தனது விட்டில் 23.05.2020 அன்று அதிகாலையில் கைது செய்யப்பட்டு பின்பு இடைக்கால ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து தி.மு.க. எம்.பி.க்கள் வி.சி.க. தலைவர் தயாநிதிமாறன், டி.ஆர்.பாலு ஆகியோரும் முன்ஜாமீன் பெற்றனர். இந்நிலையில் நேற்று முன் வி.சி.க. தலைவர் திருமாவளவன் பா.ஜ.க. விற்கு பத்து கேள்விகள் என வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தொல்.திருமாவளவன் எழுப்பிய இந்தக் கேள்விக்கு, பா.ஜ.க.வினர் பலர் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகையும், பா.ஜ.க.வை சேர்ந்தவருமான காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், தற்போது எம்.பி.யாக இருக்கும் தொல்.திருமாவளவனால் எதுவும் செய்ய முடியவில்லை. அவரை நம்பி இருப்பவர்களுக்கு என்ன செய்துள்ளார். அவர் பஞ்சமி நிலம் பற்றியோ அல்லது வேறு பிரச்சனைகள் பற்றியோ தி.மு.க.விடம் ஒரு கேள்வி கூட கேட்கவில்லை. மேலும் அடிப்படையில் வாயில் வடை சுட்டு தனது தோல்விகளை ஒப்புக்கொள்கிறார் என்று பதிவிட்டுள்ளார். இந்தக் கருத்துக்கு வி.சி.க. கட்சியினர் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.