கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு பொது முடக்கத்தால் சாதாரன ஏழை, எளிய, கூலி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் அனைவருக்கும் அரசு நிவாரணம் வழங்க வேண்டும், மாதந்தோறும் 7500 ரூபாயும் மற்றும் 10 கிலோ உணவு தானியங்களை இலவசமாக கொடுக்க வேண்டும், தேசிய கிராமப்புற நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்தினை 200 நாட்களுக்கு நீட்டிக்க வேண்டும், விவசாயிகளுக்கும், ஏழைகளுக்கும் இலவச மின்சாரம் வழங்க வேண்டும், சுய உதவிக்குழுக்கள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், கிராமிய தனியார் வங்கிகளில் வாங்கி உள்ள கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்" என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக இன்று தமிழகம் முழுக்க ஆர்பாட்டம் நடைபெற்றது.
ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆர்பாட்டம் நடைபெற்றது. ஈரோடு மூலப்பாளையத்தில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்திற்கு அக்கட்சியின் தாலூகா கமிட்டி நிர்வாகி பழனிசாமி தலைமை தாங்கினார். ஆர்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள். இதே போல ஈரோடு நகரத்தில் மட்டும் 16 இடங்களில் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்பாட்டம் செய்தார்கள்.