அதானி உலகப்பணக்காரராக ஆனதை மோடியின் சாதனையாக பார்க்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
திருவாரூரில் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசியதாவது, " ஏன் இலவசங்களை பறிக்க வேண்டும் என நினைக்கின்றீர்கள். இலவசங்களை பறித்து கார்பரேட் நிறுவனங்களை கொழுக்க வைப்பீர்கள். இதை கேள்வி கேட்டல் அண்ணாமலைக்கு கோவம் வருகிறது. அண்ணாமலை நாவடக்கத்தோடு பேச வேண்டும். அவரின் பேச்சு அவரது அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது.
உலகப்பணக்காரராக இந்தியர் இருந்தால் எந்த அளவுக்கு நாட்டு மக்களின் பணத்தை அவர் கொள்ளை அடித்து இருக்க வேண்டும். அதானி உலகப்பணக்காரராக வந்தது மோடி அரசின் சாதனை. ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் இந்தியாபின்னடைவை சந்தித்து வருகிறது. ஆனால் பொருளாதாரத்தில் வளர்ந்து கொண்டிருப்பதாக மத்திய அரசு மக்களை நம்பவைத்து கொண்டிருப்பதாகவும் கூறினார்.