Published on 25/12/2018 | Edited on 25/12/2018
![Thanga-Tamil-Selvan](http://image.nakkheeran.in/cdn/farfuture/5v_ryoVUKCwq5NmJW13Hb7CWKTGW5I0CT9LWRp4a_2Y/1545762270/sites/default/files/inline-images/Thanga-Tamil-Selvan%205555.jpg)
தேனி அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் அமமுகவின் பழனிச்செட்டிப்பட்டி செயலாளரை சந்தித்து ஆறுதல் கூறினார் அமமுக கொள்கைப்பரப்புச் செயலாளர் தங்க. தமிழ்ச்செல்வன்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தங்க. தமிழ்ச்செல்வன், ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா, ஆவின் இயக்குநர் தேர்தலில் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார். இயக்குநர்களுக்கு பணம் கொடுத்து ஓ.ராஜா தலைவராகியுள்ளார். கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அவர் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டது ஏன் என்று தெரியவில்லை. ஆண்டிப்பட்டியில் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெறும் என்கிறார்கள். நான் சவால் விடுகிறேன். ஆண்டிப்பட்டியில் அதிமுக டெபாசிட் இழக்கும் என்றார்.