தஞ்சை பெரிய கோவில் மற்றும் முருகன் சன்னதிகளில் சாமி தரிசனம் செய்த பிறகு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் பேசும் போது, இனி வரும் காலங்களில் தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் தமிழில் தான் மந்திரங்கள் ஒதப்பட வேண்டும். சிவாச்சாரியார்களுக்கு கொடுத்த முக்கியத்துவம் ஒதுவார்களுக்கு கொடுக்கப்படவில்லை என்ற குற்றசாட்டு இருக்கிறது. அப்படி ஒரு குற்றசாட்டு இருப்பது உண்மை என்றால் அது மாற வேண்டும். நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த வேண்டும் என்று தான் நாங்கள் சொல்கிறோம். தொடர்ந்து பேசிய சீமான் ஐந்து நிலைகளிலும் தமிழில் மந்திரங்கள் ஓதப்படும் என்று தான் அரசு பதில் மனு தாக்கல் செய்திருந்தது. அரசு சொல்கிறது என்பதால் அதனை செய்வார்கள் என நினைத்தோம். ஆனால் அது ஏன் செய்யவில்லை என்று தெரியவில்லை. இது தொடர்பாக வழக்கு தொடுப்பது பற்றி ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்று கூறினார்.
தம்பிக்கு அந்த பிரச்சினையே கிடையாது. மூணு மாசத்துக்கு ஒரு தடவை சமூகத்தையே மாத்திக்கிட்டா வாய்க்கு வந்ததை உளரலாம். ஏன்னா 3 தடவை பிறந்த உளரல் தம்பி. https://t.co/MCLZZBh6E7
— S.VE.SHEKHER?? (@SVESHEKHER) February 7, 2020
அதே போல், ஆதார் அட்டை, பேங்க் அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட்... இவை அத்தனையும் வைத்திருந்தும், குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்களை கைது செய்கிறார்கள் என்று சீமான் பேசியதற்கு பாஜகவின் ஏ.பி.முருகானந்தம் தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து கருத்து தெரித்துள்ளார். அதில், "என்ன வைத்து இருந்தாலும் பரவாயில்லை, குண்டு வைத்திருந்தால் ஒன்றும் செய்ய முடியாது ?" என்று கூறியிருந்தார். இதற்கு பாஜகவின் எஸ்.வி. சேகரும் பதில் கூறியுள்ளார். அதில், தம்பிக்கு அந்த பிரச்சினையே கிடையாது. மூணு மாசத்துக்கு ஒரு தடவை சமூகத்தையே மாத்திக்கிட்டா வாய்க்கு வந்ததை உளரலாம். ஏன்னா 3 தடவை பிறந்த உளரல் தம்பி என்று கூறியுள்ளார். இதற்கு நாம் தமிழர் கட்சியினர் பலரும் சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.