சட்டமன்ற தேர்தலையொட்டி திமுக தலைவர் ஸ்டாலினை கிண்டலடிக்க பா.ஜ.க.வில் ஐ.டி. விங் தீர்மானித்துள்ளது. கடந்த பொதுத்தேர்தலின்போது ராகுல்காந்தியை பப்பு (குழந்தை) என கிண்டலடித்த ஆயிரக்கணக்கான மீம்ஸ்கள் தயார் செய்து பா.ஜ.க.வினரால் பரப்பப்பட்டது. அதுபோல தி.மு.க. தலைவர் ஸ்டாலின் உளறுகிறார், அவருக்கு துண்டு பேப்பரை படித்துக்கூட ஒழுங்காக பேச முடியவில்லை, ஸ்டாலின் முதல்வர் பதவிக்கு தகுதியானவர் அல்ல, அவர் திறமையற்றவர் என மீம்ஸ்கள் முலம் பரப்ப பாஜக திட்டமிட்டுள்ளது.
இதற்காக ஸ்டாலின் பற்றி வெளிவந்த எதிர்மறை மீம்ஸ்களை திரட்ட தொடங்கியுள்ளது பாஜக. அதற்காக ஸ்டாலினை எதிர்த்து மீம்ஸ் பதிவு செய்பவர்கள் மற்றும் அதிமுக ஐடி விங்கை சேர்ந்தவர்கள் உதவியை பாஜகவின் ஐடி விங் கோரியுள்ளது.
இதுகுறித்து திமுக ஐ.டி.விங் டீமை சேர்ந்தவர்களிடம் கேட்டபோது, இதுபோல ஸ்டாலினுக்கு எதிராக செய்யப்படும் பிரச்சாரம் புதிய விஷயம் அல்ல. இதையெல்லாம் எதிர்க்கொள்ள திமுக ஐடி விங் தயாராகவே இருக்கிறது என்கிறார்கள்.