Skip to main content

இதை பற்றி எப்ப பேசுவீங்க... ட்விட்டரில் வித்தியாசமான பதில் அளித்த எச்.ராஜா... இந்த முறை ப்ளாக் செய்வாரா?

Published on 22/11/2019 | Edited on 22/11/2019

கடந்த சில நாட்களுக்கு முன்பு எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், இஸ்லாமிய மற்றும் கிறிஸ்துவ மத உணர்வுகளை புண்படுத்தினால் அவரகள் எப்படி எதிர்வினை ஆற்றுவார்களோ அதுபோல இந்துக்களின் மத உணர்வுகள் காயப்படுத்தப்பட்டால் இந்துக்கள் எதிர்வினையாற்றும் வரை திருமாவளவன் போன்ற இந்து விரோதிகள் இந்துக்களை சீண்டிக்கொண்டு தான் இருப்பார்கள். வீதிக்கு வரும் நேரமிது' என கூறியிருந்தார். இதற்கு ட்விட்டரில் சிவசங்கரன் சரவணன் என்பவர் எச்.ராஜாவிடம் ட்விட்டர் பக்கத்தில் ஒரு கேள்வி எழுப்பியிருந்தார். அந்த கேள்வியில், 'ஐயா, நம் இந்து சொந்தம் ஒருவரை சிதம்பரம் தீட்சிதர் ஒருவர் கன்னத்தில் அடித்துவிட்டார். அவரைக் கண்டித்து நீங்கள் போராட்டம் அறிவிக்க வேண்டும்' எனக் கூற அவருக்கு எந்த பதிலும் அளிக்காத ராஜா அவரை பிளாக் செய்துள்ளார். 
 

h.raja

 


இந்த நிலையில் எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், தேசிய குடிமக்கள் பதிவேடு நாடு முழுவதும் செயல்படுத்தப்படும் என்று நாடாளுமன்றத்தில் மாண்புமிகு உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா அவர்கள் அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. இதன் முலம் சரியான ஆவணங்கள் இன்றி ஊடுருவியுள்ளவர்கள் கண்டறியப்பட்டு வெளியேற்றப்படுவர் என்று கூறியிருந்தார். இதற்கு சுகு என்பவர் ட்விட்டர் பக்கத்தில் கேள்வி ஒன்றை எழுப்பியிருந்தார். அதில் "நாட்டு பற்று, பாதுகாப்பு பற்றி மட்டுமே பேசுறீங்களே. பொருளாதாரம் வேலைவாய்ப்பு பற்றி எப்ப பேசுவிங்க? என்று கேட்டிருந்தார். இதற்கு பதில் அளித்த எச்.ராஜா  "இதுவே பொருளாதாரம் தொடர்பான விஷயம் தான். ஏனென்றால் ஊடுருவல்காரர்கள் உண்மை இந்தியர்களின் வேலையைத் தட்டிச் செல்கின்றனர்" என்று கூறியிருந்தார்

 

சார்ந்த செய்திகள்