Skip to main content

திமுக கவுன்சிலர்கள் 3 பேர் கட்சியிலிருந்து நீக்கம்

Published on 23/11/2023 | Edited on 23/11/2023

 

3 DMK councilors expelled from the party

 

திமுக கவுன்சிலர்கள் 3 பேர் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாக திமுக தலைமை அறிவித்துள்ளது.

 

இதுகுறித்து அமைச்சரும், திமுக பொதுச் செயலாளருமான துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திருநெல்வேலி மாநகராட்சி திமுக கவுன்சிலர்கள் பவுல்ராஜ், மன்சூர், ரவீந்தர் மற்றும் மாநகர பிரதிநிதி ஆர்.மணி ஆகியோர் கட்சியில் இருந்து தற்காலிக நீக்கம் செய்யப்படுகிறார்கள். கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாலும், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்