தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நாளை (12/03/2021) தொடங்க உள்ள நிலையில், தங்களது கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அரசியல் கட்சிகள் அறிவித்து வருகின்றன.
அதன் தொடர்ச்சியாக, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் 15 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை டிடிவி.தினகரன் நேற்று (10/03/2021) வெளியிட்டிருந்த நிலையில், தற்போது 50 பேர் கொண்ட இரண்டாம் கட்டப் பட்டியல் வெளியாகியுள்ளது.
அ.ம.மு.க.வின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள 50 பேர் கொண்ட இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலில், கோவில்பட்டி- டிடிவி.தினகரன், சாத்தூர்- ராஜவர்மன், எடப்பாடி- பூக்கடை என்.சேகர், குடியாத்தம் (தனி)- ஜெயந்தி பத்மநாபன், ராமநாதபுரம்- முனியசாமி, திருநெல்வேலி- பாலகிருஷ்ணன், திருப்போரூர்- கோதண்டபாணி, திருப்பரங்குன்றம்- டேவிட் அண்ணாதுரை, மானாமதுரை (தனி)- மாரியப்பன் கென்னடி, தாம்பரம்- கரிகாலன், திருவையாறு- வேலு கார்த்திகேயன், தியாகராய நகர்- பரணீஸ்வரன், திருப்பூர் (தெற்கு)- விசாலாட்சி, விழுப்புரம்- பாலசுந்தரம், பென்னேரி (தனி)- பொன்ராஜா, பூந்தமல்லி (தனி)- ஏழுமலை, அம்பத்தூர்- வேதாச்சலம், சேலம் (தெற்கு)- வெங்கடாஜலம் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
அதேபோல், கிணத்துக்கடவு- ரோகினி கிருஷ்ணகுமார், மண்ணச்சநல்லூர்- ராஜசேகர், முதுகுளத்தூர்- முருகன், மதுரவாயல்- லக்கி முருகன், மாதவரம்- தட்க்ஷிணாமூர்த்தி, பெரம்பூர்- லட்சுமி நாராயணன், சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி- ராஜேந்திரன், அணைக்கட்டு- சத்யா, திருப்பத்தூர்- ஞானசேகர், பர்கூர்- கணேஷ்குமார், ஓசூர்- மாரே கவுடு, செய்யாறு- வரதராஜன், செஞ்சி- கௌதம் சாகர். ஓமலூர்- மாதேஸ்வரன், பரமத்திவேலூர்- சாமிநாதன், திருச்செங்கோடு- ஹேமலதா, அந்தியூர்- செல்வம், குன்னூர்- கலைச்செல்வன், பல்லடம்- ஜோதிமணி, கோவை (வடக்கு)- அப்பாதுரை, திண்டுக்கல்- ராமுத்தேவர், மன்னார்குடி- காமராஜ், ஒரத்தநாடு- சேகர், காரைக்குடி- பாண்டி, ஆண்டிப்பட்டி- ஜெயக்குமார், போடிநாயக்கனூர்- முத்துச்சாமி, ஸ்ரீ வில்லிப்புத்தூர் (தனி)- சங்கீதப்ரியா சந்தோஷ் குமார், சிவகாசி- சாமிக்காளை, திருவாடானை- ஆனந்த், விளாத்திகுளம்- சீனிச் செல்வி, கன்னியாகுமரி- செந்தில் முருகன், நாகர்கோவில் - ரோஸ்லின் அமுதராணி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் அமைச்சர் கடம்பூர் ராஜு போட்டியிட உள்ள நிலையில், அவரை எதிர்த்து அ.ம.மு.க.வின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் போட்டியிடுகிறார்.
வருகிற சட்டமன்றத் தேர்தலில், கோவில்பட்டி தொகுதியில் டிடிவி.தினகரன் போட்டியிடுவார் எனக் கடந்த டிசம்பர் மாதம், 28- ஆம் தேதி, நக்கீரன் இணையதளத்தில் செய்தி வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.