Skip to main content

திமுகவின் அதிரடி திட்டத்தை கையில் எடுத்த அதிமுக!

Published on 19/07/2019 | Edited on 19/07/2019

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் திமுக கூட்டணி தமிழகத்தில் மாபெரும் வெற்றி பெற்றது. இருந்தலும் அதிமுக 9 சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியை தக்க வைத்து கொண்டது. இந்த நிலையில்  தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதிகளில், 5 பவுன் வரையிலான நகைக்கடன் ரத்துங்கிற வாக்குறுதி கிராமப்பகுதிகளில் குறிப்பா பெண்கள்கிட்டே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. சட்டமன்ற இடைத்தேர்தலில் ஒட்டுமொத்தமா ஜெயிச்சி, தி.மு.க. ஆட்சியைப் பிடிச்சிருந்தா இந்த வாக்குறுதியை நிறைவேற்றி, பெண்கள் ஓட்டுகளை தக்க வச்சிருக்கும். 
 

admk



இப்ப அதை அ.தி.மு.க. செய்ய நினைக்குது. கஜானா நிலைமை மோசம்னாலும், 5 பவுன் அல்லது 3 பவுன் வரையிலான கடன்களை ரத்து செய்தால், அது தேர்தலுக்கான ஜாக்பாட் திட்டமா அமையும்னு நினைக்கும் எடப்பாடி, அது சம்பந்தமா கூட்டுறவு வங்கிகளில் கணக்கு கேட்டிருக்காராம். அவரோட சேலம் மாவட்டத்திலும் பக்கத்திலுள்ள நாமக்கல் மாவட்டத்திலும் கணக்கெடுப்பு வேலைகள் நடந்துக்கிட்டிருக்குனு அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
 

சார்ந்த செய்திகள்