சமீபத்தில் சென்னை கோட்டையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஒவ்வொரு அமைச்சர்களுடனும் தனித்தனியாக ஆலோசனை நடத்தி அறிவுரை வழங்கி இருந்தார். இது பற்றி விசாரித்த போது, அமைச்சர்கள் தங்களுடைய கருத்துக்களை சர்ச்சை ஏற்படும் வகையில் தெரிவிப்பதால் அதிமுக தலைமைக்கு கடும் நெருக்கடி சூழல் ஏற்படுகிறது என்று கடுமையாக எச்சரித்து அனுப்பினார்.
இந்த நிலையில் சிவகங்கையைச் சேர்ந்த அமைச்சர் பாஸ்கரன் பேசும் போது, அதிமுகவில் அடிமட்ட தொண்டனாக இருந்து இன்று அமைச்சராகியுள்ளேன், அதுவும் இந்த அமைச்சர் பதவியை எனக்கு அம்மா கொடுத்தார்கள் என்று பேசினார். அதோடு ஒரு நல்ல துறைக்கு என்னை அமைச்சராக்கி இருக்கலாம். எனக்கு கதர் துறையை கொடுத்துவிட்டார்கள் என்று பேசியுள்ளார். அமைச்சரின் இந்த பேச்சால் அதிமுகவில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அதிமுக தலைமை அமைச்சர் மீது அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே அமைச்சர் பாஸ்கரன் பாஜவை எப்போது கழட்டி விடலாம்னு நாங்கள் நினைக்கிறோம்னு பேட்டி கொடுத்தார். அப்போது எடப்பாடிக்கு தெரிந்ததும், அமைச்சர் பாஸ்கரனை அழைத்து கண்டித்ததாக சொல்லப்படுகிறது. அதன் பின்பு அந்த மாலையிலேயே தான் அப்படி பேசவில்லை என்று அமைச்சர் பல்டி அடித்தார். அமைச்சர்கள் தொடர்ந்து சர்ச்சை ஏற்படும் வகையில் பேசி வருவதால் முதல்வர் எடப்பாடி அப்செட்டில் இருப்பதாக சொல்லப்படுகிறது.