Skip to main content

"ரஜினி வந்தால் நிறைய கட்சிகள் இருக்காது" எஸ்.வி.சேகர் அதிரடி பேச்சு! 

Published on 07/09/2019 | Edited on 07/09/2019

குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு குறித்த புத்தக வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசிய போது, காஷ்மீர் விவகாரத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு வாழ்த்துக்கள் என்று ரஜினி கூறினார். அமித் ஷாவும், மோடியும், கிருஷ்ணன், அர்ஜுனன் போன்றவர்கள் என்று புகழாரம் சூட்டினார். ரஜினி இப்படி கூறியது அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தையும், விமர்சனத்தையும் எழுப்பியது. இந்த நிலையில் சமீபத்தில் தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை தெலுங்கானா மாநில கவர்னராக பொறுப்பேற்க உள்ள நிலையில் கட்சி பதவியை ராஜினாமா செய்தார். 

 

bjp



இதனையடுத்து பாஜகவிற்கு அடுத்த தலைவர் யார் வருவார் என்ற எதிர்பார்ப்பு தமிழக அரசியலில் உருவானது. அந்த ரேஸில் பாஜக மூத்த தலைவர்கள் பலரும் போட்டியில் உள்ள நிலையில் தமிழக பாஜக தலைவராக ரஜினி வர வேண்டும் என்று பாஜக தலைமை விரும்பியதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.இந்த நிலையில் நடிகரும், அரசியல்வாதியுமான எஸ்.வி.சேகர் கூறும் போது, பாஜகவில் ரஜினி இணைய வாய்ப்பு மிக குறைவு என்று கூறியுள்ளார். ஆனால் பாஜகவின் கொள்கையும்,  ரஜினியின் கொள்கையும் ஒரே மாதிரியானவை என்றும் கூறினார். ரஜினி அரசியலுக்கு வந்தால் பல கட்சிகள் காணாமல் போய்விடும் என்பது உறுதி என்றும் எஸ்.வி.சேகர் கருத்து தெரிவித்துள்ளார்.

 

சார்ந்த செய்திகள்