Skip to main content

உலகின் முதல் டிஎன்ஏ பிளாஸ்மிட் கரோனா தடுப்பூசி - மத்திய அரசுக்கு விநியோகம் தொடங்கியது!

Published on 02/02/2022 | Edited on 02/02/2022

 

zydus cadila

 

இந்தியாவிலேயே முழுக்க முழுக்க தயாரிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசி மக்களுக்கு முழு வீச்சில் செலுத்தப்பட்டு வந்தநிலையில், கடந்தாண்டு இறுதியில் இந்தியாவிலேயே முழுவதுமாக தயாரிக்கப்பட்ட ஸைடஸ் காடிலா நிறுவனத்தின் ‘ஸைகோவி - டி' தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டது.

 

இந்தநிலையில் ஸைடஸ் காடிலா நிறுவனம்,‘ஸைகோவி - டி' தடுப்பூசியை மத்திய அரசுக்கு விநியோகிக்க தொடங்கியுள்ளது. மேலும் ஸைடஸ் காடிலா நிறுவனம் தனது தடுப்பூசியை தனியார் சந்தையில் (தனியார் மருத்துவமனைகளுக்கு) விற்பனை செய்யவும் முடிவு செய்துள்ளது.

 

‘ஸைகோவி - டி' தடுப்பூசியின் ஒரு டோஸின் விலை 265 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி மொத்தம் மூன்று டோஸ்களை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. இத்தடுப்பூசியை 12 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினருக்கு செலுத்தலாம் என்பதும், ‘ஸைகோவி - டி' தடுப்பூசி உலகின் முதல் டிஎன்ஏ பிளாஸ்மிட் கரோனா தடுப்பூசி என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்