ஆந்திர மாநில முதல்வராக பதவியேற்ற ஜெகன்மோகன் ரெட்டி. தினந்தோறும் பலவேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதில் ஒரு பகுதியாக சமீபத்தில் பதவியேற்ற அமைச்சரவையில் பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளார். ஆந்திர மாநிலத்தில் ஜெகன் தலைமையிலான அமைச்சரவையில் 25 அமைச்சர்கள் மற்றும் 5 துணை முதல்வர்கள் இடம் பெற்றுள்ளனர். ஆந்திராவில் உள்துறை அமைச்சராக பட்டியலினத்தைச் சேரந்த பெண்ணை நியமித்துள்ளார் அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி. பட்டியலினத்திலிருந்து வரும் முதல் பெண் அமைச்சர் என்ற வரலாற்றை உருவாக்கியுள்ளார்.
ஆந்திர மாநில தலைநகர் அமராவதியில் நேற்று முன் தினம் பதவி ஏற்பு விழா நடைபெற்றது. இதில் பட்டியலினத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு உள்துறை அமைச்சர் பதவி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில் உள்ள பிரதிபடு (தனி) தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் மெகதோட்டி சுஜரிதா. ஆந்திரா - தெலங்கனா பிரிவுக்குப்பிறகு, அம்மாநிலத்தில் உள்துறை அமைச்சராக பதவி ஏற்கும் முதல் பெண் என்ற பெருமையைப் பெறுகிறார் சுஜரிதா. அதே போல் ஜெகன் அமைச்சரவையில் மூன்று பெண்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. தனது தந்தை ராஜசேகர ரெட்டி முதல்வராக இருந்த போது அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தவர்களுக்கு ஜெகன் தனது அமைச்சரவையில் வாய்ப்பளித்துள்ளார். இருப்பினும் இவர்களின் பதவிக்காலம் இரண்டரை ஆண்டுகள் மட்டுமே என முதல்வர் ஜெகன் ஏற்கனவே அறிவித்திருப்பது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் உள்ள அனைத்து மாநில தலைவர்களும் ஜெகனின் நடவடிக்கைளை கண்டு வியந்தனர்.