
உத்தரப் பிரதேச மாநில முதல்வர் முதல்வர் யோகி ஆதித்யநாத், அண்மையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்தார். அதில் பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
அந்த பேட்டியில் அவர் தெரிவித்துள்ளதாவது, “இந்துக்கள் பாதுகாப்பாக இருந்தால் முஸ்லிம்களும் பாதுகாப்பாக இருப்பார்கள். உத்தரப் பிரதேசத்தில் முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள். 2017க்கு முன்பு வரை இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் இடையில் கலவரம் நடந்து கொண்டிருந்தது. ஆனால், 2017க்கு பிறகு கலவரங்கள் நடப்பதில்லை. 100 இந்து குடும்பங்கள் வாழும் பகுதியில் ஒரு முஸ்லிம் குடும்பம் பாதுகாப்பாக இருக்கும். ஆனால், 100 முஸ்லிம் குடும்பங்கள் வாழும் பகுதியில் 50 இந்துக்களாவது பாதுகாப்பாக இருக்க முடியுமா?.
முடியாது, வங்கதேசம் தான் அதற்கு சரியான எடுத்துக்காட்டு. இதற்கு முன்பு, பாகிஸ்தான் எடுத்துக்காட்டாக இருந்தது. ஆப்கானிஸ்தானில் என்ன நடந்தது? புகை இருந்தாலோ அல்லது யாராவது தாக்கப்பட்டாலோ, நாம் தாக்கப்படுவதற்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும். அதை தான் நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். 2024 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸும் மற்றும் எதிர்க்கட்சிகளும் தவறான பரப்புரையை மேற்கொண்டனர்.
அவர்களுக்கு வெளிநாட்டில் இருந்து பணம் வந்தது. ஜார்ஜ் சோரஸ் இது குறித்து ஏற்கெனவே தெரிவித்திருக்கிறது. இது போன்ற நிறைய உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும். சமூக ஊடகம், இணையத்தளங்கள் மூலம், பா.ஜ.க அரசியலமைப்பை மாற்றி விடும் என்று அவர்கள் பரப்புரை மேற்கொண்டனர். அவர்களது அனைத்து பரப்புரைகளும் பொய்யாக்கப்பட்டது. நடந்த மக்களவைத் தேர்தலில் வெளிநாட்டு பணம் நாடு முழுவதும் ஈடுபடுத்தப்பட்டது. அதில், காங்கிரஸும், இந்தியா கூட்டணியும் வெளிநாட்டில் நேரடியாக ஈடுபட்டன. அந்த தேர்தலில், செல்வாக்கு பெற அவர்கள் நினைத்தனர். இந்த நடவடிக்கை தேசத்துரோக வழக்கின் கீழ் வர வேண்டும்” எனத் தெரிவித்தார்.
அந்த பேட்டியில், உத்தரப் பிரதேசத்தில் நிகழும் புல்டோசர் கலாச்சாரம் குறித்து அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த யோகி ஆதித்யநாத், “நீதியின் மீது நம்பிக்கை கொண்டவர்களுக்கு நீதி வழங்கப்படுகிறது. நீதியையும், சட்டத்தையும் தனது கைகளில் எடுப்பவர்களுக்கு சட்டத்தின் கட்டமைப்பிற்குள் ஒரு பாடம் கற்பிக்கப்படுகிறது. அது அவர்களுக்குப் புரியும் மொழியில் விளக்கப்பட வேண்டும்” என்று கூறினார்.