
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை மானிய கோரிக்கையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அமைச்சர் ஐ. பெரியசாமி மேல்நிலை நீர்த் தொட்டி இயக்குபவர்களுக்கும், தூய்மை காவலர்களுக்கும், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்குக் கொண்டு சென்று ஊதியம் உயர்த்தி வழங்கப்படும் எனச் சட்டசபையில் அறிவித்தார்.
அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை தொழிலாளர் சங்க மாநில தலைவர் ராமாநிதி. ,மாநில பொதுச் செயலாளர் கிருஷ்ண மூர்த்தி மற்றும் சிபிஐ மாவட்டச் செயலாளர் தோழர் ஏ. பி மணிகண்டன் தலைமையில் சுமார் 500க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள், தூய்மை இந்தியா திட்டப் பணியாளர்கள், மற்றும் பம்பு ஆபரேட்டர்கள் சுமார் 500 பேர் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமியைத் திண்டுக்கல்லில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து சால்வை மற்றும் மாலை அணிவித்து தங்களுடைய நன்றியைத் தெரிவித்தனர்.
அப்போது ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பேசும் போது, “தூய்மை பணியாளர்களுக்கும் தூய்மை பணியாளர்களுக்கும், பம்பு ஆபரேட்டர்களுக்கும்பாதுகாப்பு அரணாக இருப்பது திமுக அரசு. திராவிட மாடல் ஆட்சி நாயகரும். முதல்வருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்தவுடன் ஊரக வளர்ச்சி துறையில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. இப்போது மீண்டும் ஊதிய உயர்வு வழங்கப்பட உள்ளது. இதுபோல பம்பு ஆப்ரேட்டர்களுக்கும் விரைவில் ஊதிய உயர்வு வழங்கப்படும்” என்று கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பொருளாளர் கு.சத்தியமூர்த்தி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தண்டபாணி, ஆத்தூர் நடராஜன், கிழக்கு மாவட்ட திமுக துணைச்செயலாளர் ஆ. நாகராஜன், மேயர் இளமதி ஜோதிபிரகாஷ், துணை மேயர் ராஜப்பா, ஒன்றிய செயலாளர்கள் திண்டுக்கல் நெடுஞ்செழியன், வெள்ளிமலை, ஆத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் முருகேசன், திண்டுக்கல் மாநகர பொருளாளர் மீடியா சரவணன், சட்டமன்ற உறுப்பினர் முகாம் அலுவலக தாசில்தார் நவனீதகிருஷ்ணன் உள்ளிட்ட சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.