வங்காளதேசத்திலிருந்து சட்டவிரோதமாக குடிபெயர்ந்தவர்களின் தொடர்பாக அண்மையில் தேசிய குடிமக்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் 40 லட்சத்திற்கும் அதிக மக்கள் அந்த பட்டியலில் இடம் பெறவில்லை. இதனால் சர்ச்சை வெடித்த நிலையில் திரிமுனால் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி இந்த தேசிய குடிமக்கள் பதிவேடு உள்நாட்டு போரிற்கு வழிவகுக்கும் என கூறியிருந்தார்.
இதனை அடுத்து அந்த விவகாரம் குறித்து ஆய்வு செய்ய திரிமுனால் காங்கிரஸ் எம்.பிக்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் 8 பேர் அசாம் வந்தனர். ஆனால் ஆய்வு செய்ய வந்தவர்களை போலீசார் சில்சார் விமானநிலையத்திலேயே தடுத்து நிறுத்தி வைத்தனர். அங்கு 144 தடை விதிக்கப்பட்டிருப்பதால் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என போலீஸ் சார்பில் கூறப்பட்டாலும் அவர்கள் சென்றே ஆகவேண்டும் என வெளியேற முற்பட்டதால் தொடர்ந்து அங்கு பரபரப்பு நிலவியது. அப்போது பெண் எம்.பிக்கும் ஒரு பெண் கான்ஸ்டபிளுக்கும் ஏற்பட்ட தள்ளுமுள்ளில் பெண் கான்ஸ்டபிளுக்கு அடிபட்டது. பெண் கான்ஸ்டபிளை பெண் எம்.பி தாக்கிய வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது.
#WATCH: TMC’s Mahua Moitra seen assaulting lady constable who tried to restrain Mahua Moitra after TMC leaders were stopped at Silchar Airport. Constable received injuries. #NRCAssam pic.twitter.com/FJjNQ77ngO
— ANI (@ANI) August 2, 2018