Published on 29/12/2021 | Edited on 29/12/2021
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஜனவரி முதல் வாரத்தில் ஐக்கிய அரபு அமீரக்திற்குப் பயணம் மேற்கொள்ளவிருந்தார். ஜனவரி ஆம் தேதி இந்த பயணம் தொடங்கும் என தகவல்கள் தெரிவித்தன. இந்தநிலையில் பிரதமர் மோடியின் ஐக்கிய அரபு அமீரக பயணம் ஒமிக்ரான் பரவல் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக சௌத் ப்ளாக் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் ஒத்திவைக்கப்பட்ட பிரதமர் மோடியின் பயணம், பிப்ரவரி மாதம் நடைபெறலாம் எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பிரதமர் மோடியின் இந்த பயணத்தின்போது இந்தியா - ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இடையேயான விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தை இருநாட்டு தலைவர்களும் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் பிரதமர் மோடி, துபாய் எக்ஸ்போவையும் பார்வையிட உள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.