பெண்களை தகாத முறையில் தொட்டால் கைகளை வெட்டித் துண்டாக்குவேன் என பாரதிய சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியின் தலைவர் அர்விந்த் ராஜ்பர் பேசியுள்ளார்.

நாடு முழுவதும் பெண்களின் மீதான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதுமாதிரியான குற்றங்கள் பொது சமூகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் சூழலில், சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியின் தலைவர் அர்விந்த் ராஜ்பர் பொதுமக்கள் மத்தியில் பேசுகையில், பெண்களையும், சிறுமிகளையும் தகாத முறையில் தொடுபவர்களைக் கூட்டிவந்து, அவர்களது கைகளை வெட்டித் துண்டாக்குவேன் என பரபரப்பாக பேசினார்.
இதற்கு முன்பாக உ.பி. அமைச்சரும், சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியின் மூத்த தலைவருமான ஓம் பிரகாஷ் ராஜ்பர், சட்டத்தை கடுமையாக்காமல் இதுபோன்ற குற்றம் செய்பவர்களை ஒருபோதும் தடுத்து நிறுத்த முடியாது. இவர்களுக்கு எதிராக குரல்கொடுத்துக் கொண்டும், காவல்நிலையங்களில் வழக்குப்பதிவு செய்துகொண்டும் மட்டும் இருந்தால் போதாது. வெளிநாடுகளில் இருப்பதைப் போல சட்டங்கள் இங்கு கொண்டுவரப் படவேண்டும். இங்குள்ள மக்கள் குற்றவாளிகளைத் தூக்கிலிடுவதைக் கண்கொண்டு பார்க்கவேண்டும் என பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.