16- வது மக்களவையில் அங்கம் வகித்த உறுப்பினர்களின் (Lok sabha Mps Performance Rank lists) செயல்பாடுகள் , உறுப்பினர் தொகுதியின் வளர்ச்சி , வேலை வாய்ப்பு , 2014- 2109 ஆண்டு வரை உறுப்பினர்களின் மக்களவை வருகை , மக்களவையில் விவாதத்தில் பங்கேற்றது உள்ளிட்டவை அடிப்படையாக கொண்டு "இந்தியா டுடே" தொலைக்காட்சி மக்களவையில் எந்த கட்சி சிறப்பாக செயல்பட்டது என்ற பட்டியலை வெளியீட்டது.


1. சிவசேனா - 44 % (A and A+ Grade).
2. அதிமுக - 39% (A and A+Grade).
3.பாரதிய ஜனதா கட்சி - 29% (A and A+ Grade).
4. காங்கிரஸ் கட்சி - 23% (A and A+ Grade).
5. பிஜூ ஜனதா தளம் - 18% (A and A+ Grade).
6. திர்ணாமூல் காங்கிரஸ் கட்சி - 10% (A and A+ Grade).
7. தெலுங்கு தேசம் கட்சி - 7% (A and A+ Grade).
உள்ளிட்ட கட்சிகளின் மக்களவை உறுப்பினர்கள் சிறப்பாக கடந்த ஐந்து ஆண்டுகளில் பணியாற்றி உள்ளனர் என இந்தியா டுடே தெரிவித்துள்ளது. மேலும் இந்திய அளவில் சிவசேனா கட்சி மற்றும் அதிமுக கட்சி உறுப்பினர்கள் சிறப்பாக மக்களவையில் பணியாற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மக்களும் தங்கள் தொகுதி மக்களவை உறுப்பினர்களின் செயல்பாடுகள் எப்படி உள்ளது ? என்பதை "India Today" இணையதளத்தில் தொகுதியின் பெயரை குறிப்பிட்டு தெரிந்துக்கொள்ளலாம் என "இந்தியா டுடே" தெரிவித்துள்ளது.
பி.சந்தோஷ் , சேலம்.